சிம்புவின் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு மற்றும் நிதி அகர்வால் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு குடும்பக் கதையை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படியான நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் சுசீந்திரன் பேசியுள்ளார்.
அதில், ஈஸ்வரன் திரைப்படத்தின் கதை நடிகர் ஜெய்-காக எழுதப்பட்ட கதை தான் அது. அதை கொஞ்சம் மாற்றி சிம்புவுக்காக எடுக்க முயற்சித்தேன். ஆனால் காரி துப்பிட்டாங்க. நடிகர் ஜெய் அவர்களை வைத்து படம் பண்ணுவதற்காக அந்த கதையை எழுதி முடித்துவிட்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இது முழுக்க முழுக்க ஒரு குடும்பக் கதை. இந்த படத்தில் ஹீரோவுக்கு வேலையே இல்ல. ரொம்ப நாளா சிம்பு என்கிட்ட படம் பண்ண வேண்டும் என்று பேசிட்டே இருந்தாரு.
அப்போ என்ன சார் 22 நாளில் படத்தை முடிச்சிட்டீங்களாமே நான் மாநாடு ஷூட்டிங் போகப்போறேன் அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்று சொன்னாரு. நானும் ஜெய்க்காக வைத்திருந்த ஈஸ்வரன் படத்தின் கதையை சொன்னதும் சிம்புவுக்கு பிடித்து போக அவரும் ஓகே சொல்லிட்டாரு. அதுமட்டுமல்லாமல் அவர் எனக்கு வைத்த செக் என்னவென்றால் 23 நாள் தான் டேட் கொடுத்தார். 80 நாள் கொடுத்திருந்தால் வேற மாதிரி பண்ணி இருப்பேன். அந்த 23 நாளில் சிம்பிளா இப்படி ஒரு கதையை தான் பண்ண முடிந்தது. ஆனா அந்த கதையை பார்த்துட்டு எல்லோரும் காறி துப்பிட்டாங்க என்று சுசீந்திரன் பேசியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…