Categories: சினிமா

அருணாச்சலம் படத்தை இப்போ ரீமேக் பண்ணா அந்த நடிகர வச்சு தான் எடுப்பேன்.. வேற சாய்ஸே இல்ல.. சுந்தர் சி ஓபன் டாக்..!

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.

அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.

இப்படியான நிலையில் சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டியில், நீங்க இயக்கிய படங்களை மீண்டும் ரீமேக் செய்தால் அதில் யாரை நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில் முதலாவதாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் மாதவன் கதாபாத்திரத்தில் அசோக் செல்வமும் நடித்தால் நன்றாக இருக்கும். கார்த்தியின் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து மேட்டுக்குடி திரைப்படத்தில் கார்த்தி நடித்த நன்றாக இருக்கும் என்று கூறினார். இறுதியாக அருணாச்சலம் திரைப்படம் பற்றி கேட்க அப்போ சூப்பர் ஸ்டார் இப்போ தளபதி தான். இதற்கு வேற சாய்ஸே இல்லை என்று அடித்து கூறினார். ரஜினி, சௌந்தர்யா, ரம்பா மற்றும் மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அருணாச்சலம். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சிறந்த திரைப்படம் முற்பட மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

மாலை 3 மணிக்கு அதிரப்போகும் தமிழக அரசியல்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ வெளியாகிறது… 3 PM-க்கு லைவ் மிஸ் பண்ணாதீங்க….!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…

6 minutes ago

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago