#image_title
ஸ்ரீதர் 1933ம் ஆண்டு ஜீலை 22ம் தேதி தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தார். பள்ளிக் காலத்திலேயே நாடகங்கள் எழுதிய இவர் தன்னுடைய 21 வயதிலேயே திரைப்படத்துறைக்குள் கதாசிரியராக நுழைந்தார். ரத்தபாசம் நாடகத்தில் இவரது எழுத்துக்கள் கவனம் பெற்றது. நாடக அரங்கள உரிமையாளர் டி.கே.சண்முகம் அந்த நாடகத்தினால் ஈர்க்கப்பட்டு, அந்த நாடகம் அனைத்து பெரு நகரங்களிலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இந்த நாடகம் வெற்றி பெற்றதையடுத்து, இவருக்கு தமிழ் சினிமாவில் எழுத வாய்ப்பு கிடைத்தது.
1954ம் ஆண்டு தன்னுடைய 21 ஆவது வயதில், சிவாஜி கணேசன், பத்மினி நடித்த எதிர்பாராதது என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை இயக்கியவர் சித்தரப்பு நாராயணமூர்த்தி. அதன்பின்னர் ஸ்ரீதருக்கு வரிசையாக படங்களில் கதை எழுத வாய்ப்புகள் குவிந்தன. அப்படி ஸ்கிரிப்ட் எழுதிய மற்றொரு ஹிட் திரைப்படம் அமரதீபம். இந்தப்படம் வெளியான ஆண்டு 1956.
இந்தப்படம் இந்தியில் அமர் தீப் என்ற பெயரில் 1958ம் ஆண்டு தேவ்ஆனந்த் வைஜெயந்திமாலா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. கதையாசிரியராக மட்டும் இருப்பதை விரும்பாத ஸ்ரீதர், இயக்குனராக மாற வேண்டும் என்று முடிவெடுத்தார் ஸ்ரீதர். இவரது இயக்கத்தில் உருவான முதல் படமாக கல்யாண பரிசு உருவானது. அந்த படமே தமிழ் சினிமாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கோணக் காதல் கதையை வித்தியாசமான பாணியில் அவர் உருவாக்கியிருந்தார்.
இந்தப்படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சரோஜா தேவி ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப்படம் ஜெமினி கணேசனுக்கும் பெரிய ஹிட் கொடுத்தது. சரோஜா தேவிக்கும் இந்தப்படம் ஒரு நல்ல திரும்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை , சிவந்த மண் பொன்ற ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்தார்.
தன்னுடைய ஹிட் படங்களை இந்தியிலும் ரீமேக் செய்து அங்கும் வெற்றிக் கொடி நாட்டினார். 80 களிலும் அவர் இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன், யாரோ எழுதிய கவிதை உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…