Categories: சினிமா

விஜயை விமர்சித்த நீங்க, ஏன் என்னை பாராட்டவில்லை?.. திருநங்கை விவகாரத்தில் கொந்தளித்த இயக்குனர் சீனு ராமசாமி..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியான நிலையில் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள விஜய் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பே தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி பொது மக்களுக்கு உதவிகளை செய்து வந்தார். அப்போதிலிருந்தே விஜய் அரசியலுக்கு வருவார் என்று பலரும் கூறி வந்த நிலையில் விஜய் சைலன்டாக இருந்தார். இருந்தாலும் விஜய் தந்தையின் சில செயல்கள் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை உணர்த்துவது போலவே இருந்தது.

இப்படியான நிலையில் கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தன்னுடைய கட்சியின் கொள்கை என்ன என்பதையும் அரசியல் எதிரி திமுகவும் பாஜகவும் தான் என்பதையும் விஜய் பிரகடனப்படுத்தினார். விஜயின் பேச்சு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு எந்த ஒரு மேடை ஏறினாலும் சென்ற ஊரில் எல்லாம் திமுகவை தான் விஜய் கடுமையாக விமர்சித்தார்.

 

இப்படியான நிலையில் அரசியலில் முழுக்க முழுக்க விஜய் கவனம் செலுத்த இருப்பதால் இன்னும் ஒரு படம் தான் நடிப்பேன் என்றும் கட்சியை தொடங்கிய போதே கூறிவிட்டார். இதனால் விஜயின் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கின்றனர். இந்த சூழலில் தனது கட்சியில் அணிகள் தொடங்கி விஜய் அறிவிப்பை வெளியிட்டார். அதில் திருநர் விங்கை ஒன்பதாவது இடத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதனை கண்டித்து திருநாள் இயக்க செயல்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா, நடிகர் விஜய் திருநர் விங் என்ற ஒன்றைத் தொடங்கியிருப்பது நல்ல விஷயம்தான், அதனை ஒன்பதாவது இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தான் இந்த ஒன்பது என்ற இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்,

இந்தப் பாடாவதி டார்க் ஜோக்கினை உங்கள் படங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள் விஜய் அண்ணா என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படியான நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இந்த விவகாரம் தொடர்பாக ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அதில், இன்று நடிகர் விஜய் அவர்களின் அரசியல் அறிக்கையில் ஒன்பதாவது இடம் தங்களுக்கு தரப்பட்டிருப்பதை விமர்சிக்கும் திருடர்கள் எனது இயக்கத்தில் உருவான கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தில் இடம் பெற்ற திருநங்கைகள் முன்னேற்ற பாடலை ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை எங்கும் எவரும், ஒரு வாழ்த்து இல்லை என்பது இன்று வரை என்னிடம் உள்ள கேள்வி என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

 

Nanthini

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

7 மணத்தியாலங்கள் ago