‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல் (60) இன்று காலமானார். 90களில் வெளிவந்த நகைச்சுவை கலந்த சீரியல் தான் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. பெரிய அளவில் அனைவராலும் பார்க்கப்பட்ட சீரியல். ஸ்ரீபிரியா. நளினி, வேததர்ஷினி. நிரோஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார். இதன் மூலமாக தான் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது இயக்குனர் எஸ்.எம்.சக்திவேல் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். ‘இவனுக்கு தண்ணியில கண்டம்’ என்ற திரைப்படம் மற்றும் பட்ஜெட் குடும்பம் என்ற சீரியலையும் இயக்கியுள்ளார். மறைந்த எஸ்.என்.சக்திவேல் அவர்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் பேசியவர், என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு வர காரணம் பட்டாபி என்ற கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை கொடுத்தவர் எஸ்.எம்.சக்திவேல் அவர்கள். என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர். அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் மிகுந்த வேதனைக்கு உள்ளானேன். போராட்டம் தான் அவருடைய வாழ்க்கை. அவருடைய ஆன்மா இறைவனிடம் செல்ல வேண்டுகிறேன். இனிமேல் எந்த பிறப்பில் பார்க்கப் போகிறோம் என்று வேதனையாக பேசியிருந்தார்.
