இயக்குனர் ரேம் பேரன்பு படத்திற்கு பிறகு பறந்துபோ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாகவும், மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி ஹீரோயினியாகவும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் மிதுல் ரேயான், அஞ்சலி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் ஜூலை நான்காம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் நடிகை கிரேஸ் ஆண்டனியின் கால் ஷீட்டுக்காக இயக்குனர் ராம் நான்கு மாதங்கள் காத்திருந்தாராம். இது குறித்த அவர் கூறுகையில், “கனவுகளை அடைவதற்கு போராடும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதைதான் இது. தங்களால் அடைந்து விட முடியாத அனைத்தையும் தங்களுடைய குழந்தைகள் அடைந்துவிட வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் அம்மா அப்பாவின் கதை.
அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறார்கள். குழந்தைகளுக்கு எது தேவை என்று குழந்தைகளிடம் அவர்கள் கேட்பதில்லை. குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்குமான இடைவெளி கூடிக்கொண்டே போகிறது. நடிகை கிரேஸ் ஆண்டனிக்கு தமிழில் இது முதல் படம். அவர் நடித்த அப்பன் படம் பார்த்தேன்.
அதில் 15 நிமிடமே ஒரு கேரக்டரில் வந்து பிரம்மாதப்படுத்தியிருப்பர். இவர் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது உறுதியாக இருந்து அவருக்காக நான்கு மாதம் வரை காத்திருந்து அவரைக் கொண்டு வந்தேன். கிரேஸ் கொஞ்சம் முயற்சி செய்தால் ஊர்வசி இடத்திற்கு வந்துவிடுவார். தமிழில் அவருக்கு ஒரு கதவு திறக்கும் என்பது என்னுடைய கனவு” என்று கூறியுள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…