லவ் பண்றியா…? “என் படத்தில் கதாநாயகி அப்படித்தான் தேர்வு செய்தோம்….”இயக்குனர் மிஸ்கின் பேச்சால் சர்ச்சை…!!

By Devi Ramu on அக்டோபர் 28, 2025

Spread the love

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ஆண்பாவம் பொல்லாதது என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த பட விழாவில் இயக்குனர் மிஸ்கின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, படத்தின் கதாநாயகி மாளவிகா மனோஜ் பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கிறார். முகத்தை பார்த்து டைரக்டர் தேர்வு செய்யவில்லை. ஆடிஷன் செய்து திறமையின் அடிப்படையில் ஹீரோயினை தேர்வு செய்துள்ளார்.

பொதுவாக என் படங்களில் கதாநாயகி யார் என்று தேர்வு செய்வது குறித்து உதவி இயக்குனர்களிடம் கேட்பேன். அவர்களும் இவர் சரியாக இருப்பார்… அவர் சரியாக இருப்பார்… என கூறுவார்கள். நான் உடனே அந்த பெண்ணை நீ லவ் பண்றியா? என கேட்பேன். அப்படித்தான் கதாநாயகி தேர்வு என் படங்களில் அமைகிறது. இதே போல ஹீரோவாக நடித்திருக்கும் ரியோ ராஜ் தனது பெயரை ரியோ என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம். ராஜ் இனி வேண்டாம். அந்தப் பெயரை சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார். கதாநாயகி குறித்து அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.