இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி 2 படத்தில் பாடகி சின்மயி எம்கோனா என்ற ஒரு பாடலை பாடியிருந்தார். பிறகு அந்த பாடலை தெரியாமல் பாடிவிட்டேன். தவறு செய்துவிட்டேன் என்கிற ரீதியில் ஒரு பதிவை தனது வலைதள பக்கத்தில் செய்திருந்தார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மோகன்ஜி கூறியதாவது, என்னுடைய திரௌபதி 2 படம் ஜனவரி மாதம் வெளியாகிறது. அதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இந்த படம் வெளியாகும் நேரத்தில் நான் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் சின்மயி மேடம் போட்ட பதிவு பற்றிய கேள்விகள் என்னை துரத்தும். அதனால் அதற்கு முன்பு அந்த பதிவை எதற்காக போட்டார் என்பது குறித்து சின்மயி ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும்.
அது எங்களுக்கு திருப்தியாக இருந்தால் ஓகே. இல்லை என்றால் அந்த பதிவை அவர் கண்டிப்பாக நீக்க வேண்டும். அவருக்கு எதிராக நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். எனக்கு சின்மயியை பர்சனலாக ரொம்பவும் பிடிக்கும். அவர் ரொம்ப தைரியமானவர். ஆனால் இப்போது அவர் போஸ்ட் போட்டதுக்கு காரணம் அவரே இல்லை. அவருக்கு பின்னால் இருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தம்தான். அதை என்னால் சொல்ல முடியும். ஆதாரத்துடன் நான் நிரூபிக்கவும் முடியும்.
அவர் 2 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அந்த பதிவை நீக்க வேண்டும். அவருடைய முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். எனக்கு அந்த படத்தில் சின்மயி பாடிய பாடல் குரலுக்கு பதிலாக இன்னொருவரை வைத்து பாடலை வெளியிட முடியும். ஆனால் நான் அதுபோல் செய்ய விரும்பவில்லை என்று இயக்குனர் மோகன்ஜி செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…