தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார்.
இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இறுதியாக இவர் வணங்கான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் மிஸ்கின் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் வாழ்க்கை பற்றியும் தன்னுடைய மனைவியை பிரிந்ததற்கான காரணம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், நான் என்னுடைய மனைவியை பிரிந்ததற்கு முக்கிய காரணம் சினிமா தான். சினிமா மீது எனக்கு தீராத காதல் இருந்ததால் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் போய்விட்டது. அதுவே நாளடைவில் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் மனக்காசப்பை ஏற்படுத்தி இருவரும் பிரிய காரணமாக அமைந்துவிட்டது. நானே என் மனைவியிடம் சென்று ஒருமுறை விவாகரத்து செய்து கொள்ளலாமா என்று வெளிப்படையாக கேட்டேன். அதற்கு அவங்க நான் கொடுக்க முடியாது என்று சொல்லி ரொம்ப அழுதுட்டாங்க.
அப்போதிலிருந்து நான் விவாகரத்து குறித்து கேட்கவில்லை. ஏனென்றால் எனக்கு நியாயம் புரிந்தது. அதனால் நாங்கள் இருவரும் தள்ளி நின்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் என்னுடைய மகளை அவங்க கிட்ட கொடுத்துட்டேன். என் மகளிடம் அம்மாவை நீ பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டேன். தற்போது நான் சினிமாவை தான் கல்யாணம் செய்து கொண்டேன். எனக்கு மனைவி தேவை இல்லை எனக்கு சினிமா போதும் என்று மிஸ்கின் வெளிப்படையாக அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…