இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசான படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாகவும் வரவேற்பு பெற்ற படமாகவும் பாலாவின் வணங்கான் படம் உள்ளது. படத்தை பார்த்து ரசிகர்களுக்கு படம் திருப்தி கொடுத்தாலும் படத்தின் மீது சில அரசியல் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதி வணங்கான் படத்திற்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அருண் விஜய் வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக நடித்து நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார்.
அவருடைய திரை வாழ்க்கையில் வணங்கான் மாபெரும் மைல் கல்லாக மாறியது. படத்தில் நடித்த பலரும் சிறப்பாகவே நடத்திருந்தார்கள். இரண்டாம் பாதியில் இருந்து படத்திற்கு வரும் மிஸ்கின் , சமுத்திரக்கனி தங்களுடைய நடிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள். படத்தின் ஒருவரி கதை என்றால் மாற்றுத்திறனாளின் வலி மற்றொறு மாற்றுத்திறனாளிக்கு தான் தெரியும் மேலும் பாலியல் குற்றங்களுக்கு குற்றம் செய்தவர்களை கொல்வது தான் சரி என்று சமூகமாக ஒரு முடிவை எடுப்பதை விடவும் நீதிமன்றமும் அந்த முடிவுக்கு துணை போவது போன்ற கிளைமாக்ஸ்.
பாலியல் குற்றங்களை செய்பவர்களை கொலை செய்வது என்பது சட்டத்தின் படி தவறு என்பது மட்டுமல்லாமல் அந்த கருத்தை நீதிமன்றமே ஏற்பது போலவும் நீதிமன்றமே அதை ஆதரிப்பது போலவும் கிளைமாக்ஸ் வைத்ததற்கு பதிலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற காட்சிகள் படத்தில் இல்லை .மேலும் திரைப்படம் போன்ற காட்சி ஊடகத்தின் பெண்களுக்கு தைரியம் கொடுக்கும் காட்சிகள் வலிமை உணர்த்தக்கூடிய காட்சி எதுவுமே இல்லை.
இந்த நிலையில் தான் மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதியின் விமர்சனத்தை வைத்துள்ளார். “பாலா அவர்களே மாற்றுத்திறனாளிகள் மீது கருணை கொள்கிறேன் என்ற போர்வையில் உங்கள் ஆணாதிக்க, ஆழ்மன வக்கிரகங்களை திரையில் நிகழ்த்தி பெண்கள் மற்றும் சிறார் பாலில் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தை பின்னுக்கு இழுக்காதீர்கள்” என்று பதித்து பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…