#image_title
கேஸ் ரவிக்குமார் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் திரையுலகில் தனக்கான ஒரு இடம் பிடித்தார். பெரும்பாலும் தான் இயக்கும் படங்களில் ஒரு காட்சிகளில் தோன்றி நடிப்பதை K.S ரவிக்குமார் வழக்கமாக வைத்துள்ளார். இயக்குனர் விக்ரமணிடம் இணை இயக்குனராக K.S ரவிக்குமார் வேலை பார்த்துள்ளார். மேலும் சேரன் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
K.S ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, சமுத்திரம், பஞ்சதந்திரம், சரவணா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.அந்த வகையில் K.S ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நாட்டாமை படம் காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. நாட்டாமை படத்தில் விஜயகுமார், பொன்னம்பலம், குஷ்பூ, மீனா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நாட்டாமை திரைப்படம் சரத்குமாருக்கு பெரும் புகழை தேடி தந்தது. இந்த படம் தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன் பாபு மற்றும் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தனர். படத்தில் கவுண்டமணி செந்தில் இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகள் அருமையாக இருக்கும்.
சமீபத்தில் நடிகர் சரத்குமாரும், இயக்குனர் K.S ரவிக்குமாரும் அளித்த பேட்டியில் கூறியதாவது நாட்டாமை படத்தில் ஒரு சீனை எடுக்கும்போது K.S ரவிக்குமார் ஒன்று கூற அதனை வேறு விதமாக புரிந்து கொண்டு கேமரா மேன் கோபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பி விட்டார். இதனால் வேறு வழி இல்லாமல் K.S ரவிக்குமார் கேமராமேனாக மாறி அந்த சீனை எடுத்ததாக பேட்டியில் கூறியுள்ளனர்.
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…