Categories: சினிமா

அட அவங்களா.. சூர்யாவுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 44 வது படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் சூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் சூர்யா அடுத்த திரைப்படத்தில் நடிக்க இணைந்து இருக்கின்றார்.

கார்த்திக் சுப்புராஜூ உடன் சூர்யா 44வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் உள்ளனர். இந்த படத்தில் வில்லனாக உரியடி படம் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜயகுமார் நடிக்க இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்கின்றார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று அந்தமானில் தொடங்கி இருக்கின்றது. அதை தொடர்ந்து முதல் சாட் வீடியோ இணையத்தில் வெளியாகிய மிகவும் பிரபலமானது. மேலும் ஒரு மாத காலம் அந்தமானில் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு நடிகர் சூர்யா காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. நேற்று இப்படத்தின் முதல் சாட் வீடியோ வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சிங்கம் பட சூர்யாவை போல் உள்ளதாகவும், ஒரு சிலர் ரோலக்ஸ் போல் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக கங்குவா திரைப்படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது அடுத்த படத்தில் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi

Recent Posts

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

13 seconds ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

1 minute ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

4 minutes ago

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

6 minutes ago

காலையிலேயே ஷாக்… இந்தியாவுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து… குவைத்தின் அதிரடி முடிவால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…

7 minutes ago

“ஆப்புன்னு நினைச்சா அதிர்ஷ்டம்” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்… இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 1 லட்சம் கோடி லாபம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…

9 minutes ago