Categories: சினிமா

வெளிப்புற ஷூட்டிங்குக்கு வரமறுத்த ரங்காராவ்… நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் என மாஸ் காட்டிய இயக்குனர்!

Spread the love

தமிழ் சினிமா உருவாக்கிய மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் எஸ் வி ரங்காராவ். ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் பிசிறு தட்டாமல் பேசி நடிக்கக் கூடியவர். தன் இளம் வயதிலேயே முதிய கதாபாத்திரங்களாக அவருக்கு அமைந்துவிட்டன. அதனால் அவரை வயதான நபராகவே ரசிகர்கள் மனதில் பதியவைத்துவிட்டனர் தமிழ் சினிமா இயக்குனர்கள்.

தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்து வந்த எஸ் வி ரங்காராவ் மிகச்சிறந்த நடிகராக இருந்த போதும் அவரை வைத்து ஷூட் செய்வது அவ்வளவு எளிதில்லையாம். பயங்கர கோபக்காரரான அவர் பல இடைஞ்சல்களை படக்குழுவினருக்குக் கொடுப்பாராம். அதில் முக்கியமான ஒன்று வெளிப்புற ஷூட்டிங்குக்கு அவர் வரமாட்டாராம்.

Directors krishnan panju

ஆனால் அவரின் இந்த பிடிவாதம் தமிழ் சினிமாவின் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவிடம் பலிக்கவில்லையாம். அவர்கள் இயக்கிய அன்னை என்ற திரைப்படத்தில் ரங்காராவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதில் ஒரு குறிப்பிட்ட காட்சியை வெளிப்புறத்தில் எடுத்தால்தான் சரியாக வரும் என முடிவு செய்துள்ளனர் இயக்குனர்கள்.

அதனால் அதற்கான வேலைகளை செய்துவிட்டு எஸ் வி ரங்காராவுக்கு தகவல் சொல்லியுள்ளனர். ஷுட்டிங் தொடங்கிய பின்னரும் அவர் வரவில்லையாம். அதன் பிறகுதான் இயக்குனர்களுக்கு விஷயம் புரிந்துள்ளது. அதனால் கோபமான இயக்குனர் பஞ்சு “இன்னும் அரைமணி நேரத்தில் அவர் இங்கு வரவில்லை என்றால் அவர் கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை வைத்து படம் எடுக்கவும் தயங்க மாட்டேன்.” என செய்தியனுப்பியுள்ளார்.

இதைக் கேட்டு பதற்றமான ரங்காராவ் உடனே ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்துள்ளார். மேலும் இயக்குனர் பஞ்சு அவரிடம் “ஒரு இயக்குனர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன் படி நடித்துக் கொடுக்க வேண்டியதுதான் நடிகரின் கடமை. ஒரு காட்சியை எங்கு எடுக்கவேண்டும் என்பதை இயக்குனர்தான் முடிவு செய்யவேண்டும். நடிகர் இல்லை” என அறிவுரை செய்து மாஸ் காட்டியுள்ளார். அந்த காலத்தில் திரைப்படத்துறையில் இயக்குனர்களுக்கு அவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது.

vinoth

Recent Posts

AI-ன் பேராபத்துகள்…. மனிதகுலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘ஆந்த்ரோபிக்’ எச்சரிக்கும் அதிர்ச்சி உண்மை?….. அதிர வைக்கும் 94 பக்க ரகசியங்கள்….!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மருத்துவத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற கொடிய நோய்களுக்கான தீர்வுகளை…

7 minutes ago

டீட்டா சரவணன் கேஸ் பாத்தீங்கள்ல…? 3 கோடி பேரை கைது பண்ணுவீங்களா…? எகிறிய சாட்டை துரைமுருகன்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குறித்து யூடியூப்பில் அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், கைதாகும் அபாயத்தில்…

18 minutes ago

அதிமுக – திமுகவுக்கு அல்வா கொடுத்த சீமான்…. அம்பை இடைத்தேர்தலில் திடீர் வேட்பாளர் பிரகடனம்… அம்பாசமுத்திரத்தில் வெடிக்கப் போகும் செம பாலிடிக்ஸ்….!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,…

22 minutes ago

“அம்பாசமுத்திரத்தில் சீமான் அதிரடி என்ட்ரி… சட்டசபைக் கணக்கைத் தொடங்கப் போகும் நாம் தமிழர் தலைவர்?”…. தெறிக்கும் தமிழக அரசியல்….!

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் விஜய்யின்…

30 minutes ago

700 கோடி டெண்டர் ரத்து முதல் இணையத் தாக்குதல் வரை…. மேயர் பிரியாவுக்கும் தவெக அரசுக்கும் முட்டல் மோதல்…. ஷாக் தரும் சென்னை மாநகராட்சி பாலிடிக்ஸ்…!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள…

38 minutes ago

“நெல்லை மாநாட்டில் வைகோவுக்கு வந்த ஆத்திரம்… என் கார் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா…? சீக்ரெட்டை உடைத்த நாஞ்சில் சம்பத்… திடீர் சர்ச்சை…!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் மற்றும் நெல்லை மாநாட்டில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்துத் தமிழக…

38 minutes ago