தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்று பெயர் பெற்ற கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய முதல் படமான மின்னலே படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் தனது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது சினிமாக்களுக்கு என தனி அடையாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக டாம்னிக் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மம்முட்டி நடித்துள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் கௌதமேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சூர்யா மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். சூர்யா தற்போது தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இவருடைய 44 ஆவது படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரெட்ரோ என பட குழு பெயரிட்டுள்ளது. இந்த நிலையில் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சூர்யா மீது பல விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இது குறித்து அவர் பேசுகையில், சூர்யாவிடம் துருவ நட்சத்திரம் படத்தின் கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டுவிட்டு இந்த படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் என கேட்டார். நான் உடனே, நான் உருவாக்கியுள்ளேன், இது என்னுடைய கற்பனையில் உருவான படம், துருவ நட்சத்திரம் படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என நினைத்தேன். சூர்யா துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க யோசித்து இருக்கவே கூடாது என்று தான் நான் யோசித்தேன்.
காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படங்களில் அவர் என்னை முழுமையாக நம்பினார். ஆனால் இந்த படத்தில் சூர்யா அப்படி என்னை நம்பவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் நான் இருந்தேன். துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தால் என்ன ஆகிவிடும்? சூர்யாவுக்கு அடுத்த பட வாய்ப்புகள் வராமல் போய்விடுமா? அவர் என்னை நம்பவில்லை. அவருக்கு காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனரை அவர் நம்பவில்லை. எனக்கு ஃபேவராக கூட நான் எதுவும் கேட்கவில்லை. உங்களுக்கு இந்த கதை பிடிக்காமல் இருக்கலாம் அல்லது புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்ன தப்பாகிவிடும்? நான் தான் தோன்றித்தனமாகவோ தலைக்கனத்துடனும் எதையும் செய்யவில்லை.
நான் ஏன் இன்னும் துருவ நட்சத்திரம் படத்தில் மீது இவ்வளவு உறுதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் படம் கடந்த வாரத்தில் எடுத்ததைப் போல் உள்ளது. மதகஜராஜா திரைப்படம் வெளியான பிறகு எனக்கு இன்னும் கூடுதல் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வந்துள்ளது. துருவ நட்சத்திரம் படத்தை நான் எப்படியாவது எடுத்து விட வேண்டும், பணத்திற்காக இல்லை, நான் எந்த இடத்தில் இருக்கின்றேன் என்பதற்காகவும் இல்லை. படத்தை உலக தரத்தில் கொடுக்க நினைத்தேன் அவ்வளவுதான். துருவ நட்சத்திரம் படத்தில் யார் வேண்டுமானாலும் பணியாற்ற முடியாது என்ற கூறி இருக்கலாம், ஆனால் சூர்யா நடிக்க மாட்டேன் என கூறியது எனக்கு வருத்தத்தை கொடுத்தது, என்ன தப்பாக போய்விடும் என்ற கௌதம் மேனன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இப்படியான நிலையில் சூரியாவை பற்றி பேச வேண்டும் என்று நான் அன்னைக்கு பேசவில்லை. அவர் என்னை நம்பி அந்த திரைப்படத்தை பண்ணி இருந்தால் மொத்தமாக வேறு மாதிரியான படமாக அது இருந்திருக்கும். இப்போ விக்ரம் சார் சூப்பரா பண்ணியிருக்காரு. அந்தப் படத்தை நம்பி தான் நான் காத்திருக்கின்றேன். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என கௌதம் மேனன் சூர்யா குறித்து அன்று பேசியதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…
குஜராத் மாநிலம் சூரத்தின் உத்னா பகுதியில், அக்டோபர் 24 அன்று 23 வயதான காஜல் என்ற பெண், அவரது முன்னாள்…
ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…