Categories: சினிமா

3 முறை போய் அவர்கிட்ட நின்னேன், ஒன்னு கூட பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாரு.. ஏ.ஆர்.ரகுமான் பற்றி பேசிய கௌதம் மேனன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வித்தியாசமாக காண்பிக்க கூடியவர். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படங்களாகும். அதனைப் போலவே கமல்ஹாசன், அஜித் மட்டும் தனுஷ் என்ன பலரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைல் ஆக கௌதம் மேனன் காட்டியிருப்பார். ஸ்டைலிஷ் ஆக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் மூலம் அசரடிப்பார்.

இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர். இப்படி பிசியாக இருந்தால் கௌதம் மேனன் இடையில் சில பிரச்சனைகள் வந்ததால் இயக்கத்தில் இருந்து ஒதுங்கினார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் சிம்புவை வைத்து இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கௌதம் மேனன் மீண்டும் தற்போது மம்மூட்டியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், 2012 ஆம் ஆண்டு நீதானே என் பொன்வசந்தம் கதையை தயாரித்த பிறகு பாடலுக்காக நான் ஏ ஆர் ரகுமானிடம் சென்றேன். அவர் கிட்ட போய் இதுதான் கதை இப்படி எல்லாம் பண்ணலாம் நீங்க என் கூட சேர்ந்து பண்ணா நல்லா இருக்கும் என்று சொன்னேன். சரி நான் ஒரு ரெண்டு நாள் கழிச்சு சொல்றேன் என்று சொல்லிவிட்டார். எனக்கு போன் செய்து அடுத்த படத்துல பாக்கலாம் இந்த படத்துல என்னால பண்ண முடியாது என்று கூறிவிட்டார். அடுத்து என்னை நோக்கி பாயும் தோட்டா கதையை ரெடி பண்ணிக்கிட்டு அவர்கிட்ட போய் திரும்பவும் நீங்க பண்ணலாம்னு சொன்ன. அப்பவும் ரெண்டு நாள் டைம் கேட்டுட்டு திரும்ப பார்க்கலாம் என்று சொல்லிட்டாரு.

திரும்பவும் மனசு கேட்காம துருவ நட்சத்திரம் படத்துக்காக அவர்கிட்ட போய் நின்னேன். ஆனா அப்பவும் ரெண்டு நாள் டைம் கேட்டுட்டு என்னால இப்ப பண்ண முடியாது நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்னு பதில் சொல்லிட்டாரு. அதுக்கப்புறம் தான் நான் ஹாரிஸ் ஜெயராஜ் என அடுத்தடுத்த இசையமைப்பாளர்களை தேடிச் சென்றேன். அவர் சொன்னது எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. இருந்தாலும் அது எனக்கு ஒரு பாடமா இருந்துச்சு. நெஜமாலுமே நான் கதை சொன்ன உடனே அவர் சரின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து படத்தை பண்ணுவோம் என்று தான் நினைச்சேன். ஆனா அது நடக்காம போய்விட்டது என்று கௌதம் மேனன் பேட்டியில் வருத்தமாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

7 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

15 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

18 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

23 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

28 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

35 minutes ago