Categories: சினிமா

வெறும் 15 நாட்களில் உருவான சூப்பர் ஹிட் படம் அது.. ரகசியத்தை உடைத்த இயக்குனர் சேரன்..

Spread the love

பிரபல இயக்குனரான சேரன் இயக்கத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெற்றி கொடி கட்டு. இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இதில் முரளி, பார்த்திபன் ஆகியோர் கதாநாயகனாக நடித்திருந்தனர். மேலும் மீனா, மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சொந்த மண்ணை விட்டு வேலைக்காக துபாய்க்கு செல்லும் மக்களின் கஷ்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான் வெற்றி கொடி கட்டு படம்.

இந்த படத்தின் இயக்குனர் சேரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் சிங்கிள் ஹீரோவை வைத்து தான் படம் எடுத்திருக்கிறேன். முதல் முறையாக இரண்டு ஹீரோக்களை வைத்து படம் எடுத்தேன். நான் அப்படி யோசிச்சு பார்த்ததே இல்லை. வெற்றிக்கொடி கட்டு படத்தின் திரைக்கதை எழுதுவதற்கு எனக்கு 15 நாட்கள் தான் ஆனது. என்னிடம் இந்த மாதிரி கதை எழுத வேண்டும் என சொன்னபோது யாரும் என்னை தொந்தரவு செய்யாத இடம் வேண்டும் எனக் கூறினேன்.

அதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து தந்தார்கள். மூன்று வேலையும் எனக்கு சாப்பாடு வந்துவிடும். நான் மட்டும்தான் ஒரு வீட்டில் இருந்து யோசித்து 15 நாட்களில் வெற்றி கொடி கட்டு படத்தின் திரைக்கதையை எழுதினேன். அந்த படம் தான் வெற்றி படமானது. துபாய்க்கு வேலைக்காக செல்லும் மக்கள் அவதிப்படுவதை படத்தில் எடுத்து கூறி இருக்கிறேன். அதற்கு என் சொந்த ஊரு தான் காரணம்.

எங்கள் ஊரில் இப்படித்தான் துபாய்க்கு செல்லும் ஏராளமான மக்களை பார்த்து இருக்கிறேன். மேலும் துபாய்க்கு செல்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நகைச்சுவையாக காட்டும் பொருட்டு வடிவேலுவையும் நடிக்க வைத்தேன். வடிவேலு இந்த படத்தில் நடிக்க பார்த்திபன் தான் காரணம். அவர்தான் வடிவேலுவிடம் சென்று பேசினார் என வெற்றி கொடி கட்டு படத்தின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சேரன். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

6 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

6 minutes ago

நாளைக்கு டிக்கெட் எடுக்காதீங்க!… ஏப்ரல் 23 இலவச பேருந்து பயணம்…. தமிழக அரசின் ஸ்பெஷல் கிப்ட்.. யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…

11 minutes ago

சீனாவின் ரகசிய சரக்குக் கப்பல்… ஈரானில் இறங்கும் விமானங்கள்… அமெரிக்காவை அதிர வைத்த உளவுத் தகவல்…!

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…

12 minutes ago

BREAKING: தமிழகம் முதல் சிங்கப்பூர் வரை… கண்ணீரில் நனைந்த தமிழ் இலக்கிய உலகம்… புதுமைத்தேனீ மா. அன்பழகன் காலமானார்…!

சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…

21 minutes ago

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ரூ.15000 வரை இனி கவலை வேண்டாம்… RBI கொடுத்த செம அப்டேட்…!!!

வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…

21 minutes ago