16 வயதிலேயே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் பாரதிராஜா. தன்னுடைய முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து இயக்கியவர். தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா ராதிகா, ராதா மற்றும் கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையையும் பெற்றவர். முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில் மற்றும் அலைகள் ஓய்வதில்லை என ஏராளமான வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்ல நடிகராகவும் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலத்தில் நடித்த இவர் பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருடைய ஒரே மகனும் நடிகர் மற்றும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென காலமானார். தன் மகனின் மறைவால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து பிறகு பாரதிராஜா சென்னை திரும்பினார். தற்போது 80 வயதை கடந்துள்ள பாரதிராஜா உடல் நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று icu வில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐசியூவில் உள்ள பாரதிராஜாவுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…