தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. சூர்யா நடிக்க இருந்த இந்தப் படத்தில் பாலா மற்றும் சூர்யா இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இந்தப் படத்திலிருந்து விலகினார். இதன் காரணமாக அருண் விஜய்க்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது வெற்றிகரமாக நடித்தும் முடித்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்த அருண் விஜய்யின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்தத் திரைப்படத்தில் அருண்விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் 25 ஆண்டுகளைக் கடந்த பாலாவின் திரைப்பயணத்தையும் இணைந்து பாலா 25 என்ற பெயரில் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விக்ரமன், மிஸ்கின் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாலா, நான் சூர்யா முன்னாடி சிகரெட் பிடிக்கவே மாட்டேன். தம்பி ரொம்ப வருத்தப்படுவான். என்னோட உடம்பு மேல என்ன விட அவனுக்கு அக்கறை அதிகம். அவன் முன்னாடி நான் சிகரெட் பிடிக்காததற்கு காரணம் சிகரெட் பிடிக்கும் போது அதை மற்றவர்கள் பார்த்தால் அட்வைஸ் தான் செய்வாங்க. ஆனா சூர்யா மட்டும் தான் வருத்தப்படுவார். ஒரு நடிகரால் வருத்தப்பட முடியாது, தம்பியாக இருந்தால் மட்டுமே வருத்தப்பட முடியும் என்று பாலா சூர்யா குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…