#image_title
அமீர் பிரபல இயக்குனரான பாலாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். முதன் முதலில் கடந்த 2002- ஆம் ஆண்டு ரிலீசான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு ராம் திரைப்படத்தை இயக்குனர். பின்னர் 2007 ஆம் ஆண்டு ரிலீசான பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கினார். ராம் திரைப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஜீவா மன நோயாளியாக நடித்துள்ளார். அவருக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அமீர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ராம் படத்தை கொடைக்கானலில் எடுத்துக் கொண்டிருந்தோம். மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு பஸ் வரும்.
ஐம்பதாயிரம் ரூபாய் பணம் யாராவது பஸ்ல கொடுத்து விடுவாங்கன்னு காத்திருப்பேன். 50 ஆயிரம் ரூபாய் வந்துச்சுன்னா அதுல ஏதாவது செட்டில்மெண்ட் பண்ணுவேன். சாப்பாட்டுக்கு கொடுப்பேன். அப்படி இல்லன்னா வேற ஏதாவது செலவுகள் இருந்தா அதை பார்ப்பேன். அதுக்கப்புறம் கேமரா மேனோட கிரெடிட் கார்டு யூஸ் பண்ணி பத்தாயிரம் 20 ஆயிரம் ரூபாய் என்று எடுத்து யூஸ் பண்ணுவேன். இப்படியே ஒரு 28 நாள் ஷூட்டிங் நடத்தினோம்.
அப்போ சவுத்ரி சார் கொடைக்கானலுக்கு வந்துட்டாரு. அவருக்கு அங்க பங்களா இருக்கு. பிரண்ட்ஸோட அப்படியே வந்துட்டு போவாரு. பரவாயில்லையே 28 நாள் நீங்க ஷூட்டிங் நடத்திட்டியே. அவுட் டோர் வந்து 28 நாள் ஷூட்டிங் நடத்தினது பெரிய விஷயம் அப்படின்னு சொன்னாரு. அவ்வளவு கஷ்டமான சூழ்நிலையும் 6 செட்டு போட்டு படம் எடுத்தேன். அதனாலதான் என் பட்ஜெட் கூடியது என ஓப்பனாக பேசி உள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…