தமிழக அரசியலில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயின் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அவருக்கு பல கட்சிகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் நிலையில் விஜய் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். அதேசமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் கட்சியில் இருந்து விலகி பலரும் மாற்று கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். ஆனால் நடிகர் விஜய் தனது கட்சியை பலப்படுத்த பல முயற்சிகளை கையில் எடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், முதற்கட்டமாக 106 மாவட்டங்களுக்கு உட்பட்ட 214 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1.2 லட்சம் பொறுப்பாளர்களுக்கு, நேற்று QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி வரலாற்றில் க்யூ ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை வழங்கிய முதல் கட்சியாக தவெக மாறியுள்ளது.
