Categories: சினிமா

சிம்பு இதில் நடிக்க கூடாது ; சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பொன்னியின் செல்வன் நடிகர்கள்

Spread the love

பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிக்க இருந்ததாகவும், ஆனால் பொன்னியின் செல்வன் நடிகர்கள் இதற்கு உடன்படவில்லை என்றும் அதனால் சிம்பு பொன்னியின் செல்வனில் நடிக்க முடியாமல் போனகாகவும் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

Ponniyin selvan illustration

அமரர் கல்கியின் வரலாற்று நாவல் தான் பொன்னியின் செல்வன். சோழ வம்சத்தில் நடந்த நிகழ்வுகளையும் கற்பனையையும் கலந்து அவர் எழுதிய இந்த காவியத்தை படிக்காதவர்கள் இருக்கவே முடியாது. பலர் இதை சினிமாவாக எடுக்க முயற்சித்தனர். எம்.ஜி.ஆர் தொடங்கி கமல் வரை பலரும் இதை திரைப்படமாக எடுக்க முயன்றனர். ஆனால் இறுதியில் மணிரத்னம் இயக்கத்தில் தான் இது சாத்தியமானது.

Ponniyin selvan poster

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படம் பொன்னியின் செல்வன். இதில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். மணிரத்தினத்திற்கு சிம்பு மிகவும் பிடித்த நடிகர், அவரை இதில் நடிக்க வைக்க வேண்டும் என வரும் விரும்பியுள்ளார், ஆனால் சக நடிகர்களால் தான் இதில் சிம்பு நடிக்க முடியாமல் போனதாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Maniratnam

அவர் கூறியுள்ளதாவது, மணிரத்திற்கு சிம்பு என்றால் இஷ்டம், இதில் சிம்புவை நடிக்க வைக்க அவர் முடிவெடுத்தார் ஆனால் பொன்னியின் செல்வன் நடிகர்களும், குழுவும் சிம்பு இதில் நடிக்க கூடாது என போர்க்கொடி தூக்கினார்கள். இது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம், பல நடிகர்கள் இணைந்து நடிக்கும் காம்பினேஷன் காட்சிகள் உள்ளது. சிம்புவோ சரியாக ஷூட்டிங் வர மாட்டார், அனைவரையும் வரவழைத்து முக்கியமான சீன் எடுக்கும் நாட்களில் சிம்பு லேட்டாக வந்தாலோ அல்லது வராமல் போனாலோ என்ன செய்வீர்கள் என அனைவரும் கூறியுள்ளார்கள்.

Simbu in ponniyin selvan audio launch

அதனால் தான் சிம்பு இந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. மணிரத்னம் சிம்புவை நடிக்க வைக்க இருந்த கதாபாத்திரம் அருள்மொழி வர்மன் உடையது. அந்த கதாபாத்திரத்தில் தான் ஜெயம் ரவி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது என கூறியுள்ளார் செய்யாறு பாலு. சிம்பு பொன்னியின் செல்வனில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Deepika

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

4 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago