பாலிவுட் நடிகர் அமீர் கான், தனது 61ஆவது வயதில் 47 வயதான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டது தற்போது இந்திய சினிமா உலகில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அயர்லாந்து தந்தைக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவரான கௌரி ஸ்ப்ராட்டை, அவரது பெயரை வைத்து பலரும் இந்து என்று தவறாகக் கருதி இணையத்தில் சாதி தேடலில் ஈடுபட்டனர். அதேநேரம், அமீர் கானின் முந்தைய திருமணங்கள் மற்றும் அவரது வயது குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறான விமர்சனங்களையும், அபத்தமான கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
இந்தத் திருமணத்தை ஒட்டி, கௌரி ஸ்ப்ராட் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்றும், இது ஒரு ‘லவ் ஜிகாத்’ என்றும் சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். கௌரி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், மத மாற்றக் கருத்துக்கள் இணையத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. மேலும், சமூக விரோத எண்ணம் கொண்ட சிலர் இந்தத் திருமணத்தை முன்வைத்து தவறான மற்றும் உள்நோக்கம் கொண்ட பொய்த் தகவல்களையும் பகிர்ந்து வந்தனர்.
இருப்பினும், இந்த மத மாற்றக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்பது தெரியவந்துள்ளது. அமீர் கான் – கௌரி ஸ்ப்ராட் திருமணம் இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் முறைப்படி பதிவுத் திருமணமாகவே நடத்தப்பட்டுள்ளது. கௌரியின் முதல் திருமணத்தில் பிறந்த மகன் குவின் மற்றும் அமீர் கானின் வாரிசுகளின் முன்னிலையிலேயே இந்தத் திருமணம் எவ்வித மத மாற்றமும் இன்றி சட்டப்பூர்வமாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…