தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. அன்று முதல் இன்று வரை மார்க்கெட் குறையாத நடிகை என்றால் திரிஷாவை கூறலாம். இவருடைய நடிப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் அடிமை. 40 வயதிலும் அதே இளமையுடன் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் கோட் திரைப்படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தனுஷ் உடன் த்ரிஷா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனுஷ் நடிப்பில் தேசிய விருது வாங்கிய ஆடுகளம் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்த நிலையில் சேவல் சண்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் கே பி கருப்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்து இருந்தார்.
இந்நிலையில் ஆடுகளம் திரைப்படத்தின் ஹீரோ ஹீரோயின் காட்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ஹீரோவாக தனுஷும் ஹீரோயினியாக திரிஷாவும் நடித்த புகைப்படங்கள் தான் இது. இந்த படத்தில் முதலில் நடிக்க டாப்ஸிக்கு பதில் திரிஷா தான் ஒப்பந்தமானார்.
ஒரு சில காட்சிகள் திரிஷாவை வைத்து எடுக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் கால் சூட் பிரச்சனை காரணமாக திரிஷா ஆடுகளம் படத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் த்ரிஷாவுக்கு பதிலாக டாப்ஸியை ஹீரோயினியாக தேர்ந்தெடுத்துள்ளனர். தனுஷ் மற்றும் திரிஷா நடிப்பில் இந்த காட்சி தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.
தமிழக அரசியலில் 'மாற்றம்' கொண்டு வருவோம் என்று தமிழக வெற்றிக்கழகம் சொன்னதன் நிஜமான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என திமுக…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…
விசிக (VCK) கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னி…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின்…
பெங்களூரைச் சேர்ந்த ஷிஃப்னாஸ் ஷெரீப் என்ற பெண், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கிய கார்ப்பரேட் வேலையைத் துறந்து,…