விஜய் பட நடிகைக்காக நீண்ட நாளா காத்திருக்கும் பட குழு.. உச்சகட்ட கடுப்பில் இருக்கும் நடிகர் தனுஷ்..

By admin on தை 19, 2024

Spread the love

நடிகர் தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்து, அந்த படம் வெளியாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் அயலான் படத்தை காட்டிலும், கேப்டன் மில்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை வசூல் நிலவரம் வெளிப்படுத்துகிறது.

#image_title

ஆனால் அதே வேளையில் படம் முழுக்க வன்முறை, துப்பாக்கி சண்டை காட்சிகள் என குடும்பமாக ரசிகர்கள் வந்து இந்த படத்தை ரசிக்க முடியாது என்றும் ஒரு தரப்பில் கடுமையான விமர்சனம் இருந்து வருகிறது. ஆனால் வசூல் ரீதியாக இந்த படம் தனுஷ்க்கு வெற்றியைத் தந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை ஆரம்பித்த தனுஷ், 30 நாட்களுக்கு தொடர்ந்து ஷூட்டிங்கை நடத்தலாம் என திட்டமிட்டு இருக்கிறார். அப்போது ஏற்கனவே ராஷ்மிகா கதாநாயகியாக ஒரு படத்தில், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

   
   

 

இந்நிலையில் அந்த படத்தின் டைரக்டர் சேகர் கம்முலா, உடனடியாக ஷூட்டிங் வருமாறு அழைத்திருக்கிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் வேலைகளை நிறுத்திவிட்டு தனுஷ் அங்கு சென்றிருக்கிறார். ஆனால் அவர் சென்று 4 நாட்களாகியும் தனுஷ் தனியாக நடித்த காட்சிகளே படமாக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா படப்பிடிப்புக்கே வரவில்லை. விவரம் கேட்ட போது அவருக்கு பிப்ரவரி மாதம்தான் கால்ஷீட் இருப்பதால் அப்போதுதான் வருவார் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் ரோல் ஒன்றில் சுப்ரீம் ஸ்டார் சரத்துகுமார் நடிப்பதால், அடுத்த 10 நாட்களுக்கு தனுஷ், சரத்குமார் நடிக்கும் காட்சிகள்தான் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி ராஷ்மிகாவுக்காக நடிக்க வந்து, சரத்குமாருடன் நடிக்க வேண்டி உள்ளதே என்று ஏகப்பட்ட கடுப்பில் தனுஷ் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இப்போது ராஷ்மிகா மந்தனா வருகைக்காக தனுஷ், சரத்குமார் இருவரும் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.