Categories: சினிமா

தன்னைப் பற்றி தவறான புரிதலில் ரஜினி… அதுக்குதான் ராயன் ஆடியோ லான்ச்சில் அப்படி பேசினாரா?… கிடைத்த கேப்பில் சுசித்ராவுக்கும் பதிலடி!

Spread the love

தமிழ் சினிமாவில் கமலுக்குப் பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் ஆரம்பித்த அவரின் திரைப்பயணம், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்றுள்ளது.

தனுஷின் திரைவாழ்க்கை எவ்வளவு நல்லபடியாக மேல்நோக்கி செல்கிறதோ, அதேயளவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சில வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதுமட்டுமில்லாமல் அவரோடு நெருக்கமாக பழகிய சிலரும் தங்கள் இணையரை விவாகரத்து செய்ய, அதற்கெல்லாம் தனுஷுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

போதாக்குறைக்கு பாடகி சுசித்ரா தனுஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். நடிகர் தனுஷின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்த சுசித்ரா அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டை வைத்தார். மேலும் தன் கணவர் கார்த்திக் ராஜாவுக்கும், தனுஷுக்கும் இடையே முறையற்ற உறவு உள்ளதாகவும் அவர் கூறினார். இதெல்லாம் சேர்ந்து அவர் பெயரை டேமேஜ் செய்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்வில் பேசிய தனுஷ் தன்னைப் பற்றிய அவதூறுகளுக்கு பதிலளித்துள்ளார். அந்த நிகழ்வில் பேசியபோது “நான் யாருடைய ரசிகன் என்பது பலருக்கும் தெரியும். நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். ரஜினிகாந்த் சாரின் வீடு போயஸ் கார்டனில் இருந்தது. எனக்கு 16 வயது இருக்கும்போது ரஜினி சாரின் வீட்டை எட்டி எட்டி பார்ப்பேன். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் போயஸ் கார்டனில் தான் இருந்தது. அப்போதுதான் எனக்கு போயஸ் கார்டனில் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை தோன்றியது. அப்போது இருந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவுக்கு இந்த தனுஷ் கொடுத்த பரிசு தான் போயஸ் கார்டனின் தான்கட்டி இருக்கும் 150 கோடி ரூபாயிலான வீடு” என்று பேசியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நான் யார் என்பது என்னைப் பெற்ற அப்பா அம்மாவுக்குத் தெரியும். என்னை படைத்த சிவனுக்குத் தெரியும். என் நண்பர்களுக்கும் என் குழந்தைகளுக்கும் தெரியும். மற்றவர்களுக்கு என்னைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. என் மனசாட்சி பேசினால் அது ஆபத்தாக முடிந்துவிடும்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தன்னைப் பற்றி தவறாக நினைத்திருக்கும் தன்னுடைய முன்னாள் மாமனார் ரஜினிகாந்துக்கும், தன்னைப் பற்றிய அவதூறு பரப்பும் சுசித்ராவுக்கும் பதில் சொல்லியுள்ளார் என கருத்துகள் எழுந்துள்ளன.

vinoth

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago