Categories: CINEMA

கேப்டனாக களமிறங்கிய நடிப்பு அசுரன்.. மிரட்டினாரா இல்லையா..? அனல் பறக்கும் ‘Captain Miller’ விமர்சனம்..

பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி இன்று திரையரங்குகளைத் தெறிக்க விடும் படம் தான் கேப்டன் மில்லர். தனுஷ்-ன் மூன்று வருட தவத்திற்கு கிடைத்த பலனாக கேப்டன் மில்லர் அமைந்துள்ளது. நடிகர் தனுஷ் அசுரன், கர்ணன் கதைக் களத்திற்குப் பிறகு மிக கனமான வேடத்தை ஏற்று அதிலும் எப்போதும் போல் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். தனது சாணிக் காயிதம், ராக்கி படத்திற்குப் பின் நேர்த்தியான கதையை உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கியுள்ளார் அருண்மாதேஸ்வரன்.

#image_title

தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ்குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். விடுதலைப் போரை அடிப்படையாகக் கொண்டு பீரியட் படமாக உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த மாதமே திரைக்கு வர வேண்டிய கேப்டன் மில்லர் போஸ்ட் புரடக்சன் பணிகளால் கால தாமதம் ஆகி பின்னர் பொங்கல் வெளியீடாக வந்துள்ளது. மேலும் இந்தப் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் நடித்த லால்சலாம், அயலான், சேப்டர் மிஷன் 1, மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்த நிலையில் லால் சலாம் பின் வாங்கியது.

#image_title

இந்நிலையில் மற்ற படங்கள் இன்று வெளியாகி தியேட்டர்களை அதகளப் படுத்துகிறது. கேப்டன் மில்லர் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். தனுஷின் அசுர உழைப்பு இந்தப் படத்திற்கு வீண் போகவில்லை என்றும், படத்தின் ஆக்சன் காட்சிகள் சூப்பராக உள்ளது எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அசுரன் படத்திற்குப் பிறகு தனுஷ்-ன் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பேசப்படும் எனவும், படத்தின் இரண்டாம் பாதி ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாகவும் படத்தைப் பார்த்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஜீத்துக்கு நேர்லே பத்திரக்கை கொடுத்தோம்.. அவர் பேசுனது ரொம்ப அநாகரிகம்.. கலைஞர் 100-க்கு அஜித் வராதது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்..

ஜி.வி. பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பக்க பலமாக அமைந்துள்ளது. ஏனெனில் இவர்கள் காம்போவில் உருவான ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் ஜி.வி.பி.தனது மேஜிக்கை கேப்டன் மில்லரில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

மேலும் இப்படத்தில் தனுஷ் நடிப்பிற்கு மீண்டும் ஒரு தேசிய விருதை தயார் செய்து வைக்கலாம் என்னும் அளவிற்கு தனுஷ் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர் ரசிகர்கள். படத்தின் அறிமுகக் காட்சியும், இண்டர்வெல் காட்சியும் இதுவரை இல்லாத அளவில் ரசிகர்களை வைப் ஏற்றுவதாகவும் படத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு இப்படி ஒரு படத்தைக் கொடுத்ததற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி.அதை கேப்டன் மில்லரில் மீண்டும் நிரூபித்திருக்கிறார் தனுஷ்.  இந்த படத்திற்கு நமது ரேட்டிங் 3/5
கேப்டன் மில்லர் : வெடிச்சத்தம்

#image_title

John

Recent Posts

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

2 நிமிடங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

40 நிமிடங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

2 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

3 மணி நேரங்கள் ago

அடேங்கப்பா.. பேச மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு பேசிட்டீங்களே.. விருது விழாவில் மாஸ் காட்டிய விஜய்..

தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது…

4 மணி நேரங்கள் ago

விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த இந்த கதை அஜித்துக்காக எழுதப்பட்டதா? இயக்குனர் சொன்னதும் ஷாக்கான தல!

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட…

5 மணி நேரங்கள் ago