தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண்மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவருமே பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடியின் விவாகரத்து குறித்தான பேச்சுக்களே நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோ ஒன்றில் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்த ஒரு பகீர் தகவலை கூறியுள்ளார்.
அதாவது தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி பிரிந்து வாழ்வதாக அவர்கள் அறிவித்திருந்தாலும் அவர்களது மகன்கள் இரண்டு பேரிடமே மிக சுதந்திரமாக இரண்டு பேரின் வீட்டிலேயே வளர்கிறார்கள் எனவும் இதுவரை தனுஷ் வாங்கிய சொத்துக்கள் அனைத்தும் தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய இருவரின் பெயரிலேயே வாங்கியிருக்கிறார், இப்போது அதில் எந்த பிரச்சனையும் வரவில்லை, இருவரும் நினைத்தபோதெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்றும் கூறிய அந்தணன்,
“2K கிட்ஸ்களின் உலகத்தில் பாய் பெஸ்டி, சிச்சுவேஷன்சிப் போன்ற உறவுகள் வழக்கத்தில் இருக்கின்றன. அது போலவே தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி சிச்சுவேஷன்சிப் போன்ற உறவில் இருப்பதாக தெரிகிறது. ‘உன்னுடைய சுதந்திரத்தை நான் பறிக்கமாட்டேன், என்னுடைய சுதந்திரத்தை நீ பறிக்காதே, உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ விலகிவிடலாம், எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் விலகிவிடுவேன்’ என்பது போன்ற உறவில்தான் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் இருக்கின்றனர்” என்று அந்தணன் அந்த வீடியோவில் பகிர்ந்திருந்த கருத்து குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…