பக்தர்களே ரெடியா..? கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்… முழு விவரத்தை வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு..!!

Spread the love

இந்து சமய அறநிலைத்துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவ திருக்கோவிலுக்கு, புரட்டாசி மாதத்தில் தொடங்கவிருக்கும் ஆன்மீக பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அமைச்சர் வி.பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.

புரட்டாசி மாதத்தில், பிரசித்தி பெற்ற வைணவ திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 முதல் 70 வயதிற்குட்பட்ட 1000 பக்தர்களை ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு நிதியில், 2000 பக்தர்களை ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்வதற்காக ரூ.50 லட்சம் வழங்கப்படும். இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள வைணவ திருக்கோயில்களுக்கு 2000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்த பயணம் 4 கட்டங்களாக, 20.9.2025, 27.9.2025, 4.10.2025, 11.10.2025 ஆகிய நாட்களில், அந்தந்த மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

தகுதிகள் :

  • இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
  • 60 – 70 வயத்துக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்
  • ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் மிகாமல் இருப்பதோடு அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடம் இருந்து பெற்று இருக்க வேண்டும்
  • உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்று
  • ஆதார் கார்டு

விண்ணப்பிக்கும் முறை :

  • இந்தப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்கள், அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று தேவையான சான்றிதழைக் கொடுத்து விண்ணப்பிக்கலாம்.
  • www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய  சான்றிதழ்களை இணைத்து, சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 25/9/2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு, இந்து சமய அறநிலையதுறையின் இணைதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Srimathi

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

7 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

14 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

18 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

38 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

42 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

46 minutes ago