Categories: சினிமா

அடேங்கப்பா.! கேம் சேஞ்சர் படத்திற்கு இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.?

Spread the love

ஷங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். இவர் எஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஷாங்கரின் படங்கள் தொழில்நுட்பத்தில் மிரட்டும் வகையிலும் பிரம்மாண்டம் நிறைந்ததாகவும் சமூகநீதி கருத்துக்களை கொண்டதாகவும் இருக்கும். அதனால் இவரை பிரம்மாண்ட இயக்குனர் ஷாங்கர் என்றும் கூறுவர். 1993 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர். முதல் படமே அவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தது. தொடர்ந்து காதலன், 1996 ஆம் ஆண்டு இந்தியன், 1998 இல் ஜீன்ஸ், 1999 ஆம் ஆண்டு முதல்வர் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஷங்கர்.

2000 காலகட்டத்திற்கு பிறகு அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 என இவரது படங்கள் பெரும்பளவு மக்களுடைய நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற படமாகவே இருக்கும். இயக்குனராக மட்டுமல்லாமல் ஷங்கர் தயாரிப்பாளராக கல்லூரி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வெயில், ஈரம் போன்ற திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஷாங்கர் படங்கள் என்றாலே வெற்றி படங்கள் தான் என்று கூறிவந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 வெளியாகி தோல்வி அடைந்தது என்று சொல்லலாம்.

இருந்தாலும் அடுத்ததாக இந்தியன் 3, ராம் சரணை வைத்து Game Changer ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் ஷங்கர். இதில் கேம் சேஞ்சர்  திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்திற்காக இயக்குனர் ஷங்கர் 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்திற்கும் இதே சம்பளம் தான் வாங்கியதாக கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

யாரெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்?… அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடி விபரம்…!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…

6 minutes ago

72 உயிர்கள்… 1153 கடைகள் காலி… 11 வயது சிறுவன் செய்த விபரீதம்… கராச்சி தீ விபத்தின் வெளியான அதிர்ச்சி உண்மை…!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…

26 minutes ago

யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்… ரூ.1 லட்சம் பரிசு வாங்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…!

சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…

37 minutes ago

போலி ‘திருமண ஒப்பந்தம்’… மதம் மாற கட்டாயம்… உத்திரபிரதேசத்தில் அம்பலமான வீட்டு முதலாளியின் கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

47 minutes ago

மனைவியின் அந்த ஒரு பழக்கம்… கோபத்தில் கணவன் செய்த விபரீதம்… : 12 நாட்கள் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை… கணவன் வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்…!

கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…

56 minutes ago

அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு பலியான உயிர்… நெல் மூட்டைகளுக்கு நடுவே சிக்கி மூச்சுத்திணறி இறந்த பெண்… தஞ்சை நெல் கிடங்கில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…

1 மணத்தியாலம் ago