இளித்தவாயர்களாக தென் மாநிலங்கள் மாறக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் கலந்துகொண்ட நிலையில், திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தன.
கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநில தண்டிக்கப்பட்டு, பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டினர். ஏற்கனவே 543 எம்.பிக்கள் இருக்கும்போதே நாடாளுமன்றத்தில் பேசப் போதிய நேரம் கிடைப்பதில்லை என்றும், உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் மாநிலங்களின் குரல் மேலும் நசுக்கப்படும் என்றும் கவலை தெரிவித்தனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற இடங்கள் உயர்த்தப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போதைய இடங்களின் எண்ணிக்கையையே நிரந்தரமாகத் தொடரச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் 50% வரை இடங்கள் உயர்த்தப்படும் என்ற ஒன்றிய அரசின் கருத்து, மாநிலங்களை ஏமாற்றுவதற்கான “ஆசை வார்த்தை” என கூட்டத்தில் ஒருமனதாகக் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நீடிக்க வேண்டும் என்றும், இதில் மாற்றம் வந்தால் மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மறுபுறம், இந்த விவகாரம் மாநிலத்தில் ஒரு புதிய அரசியல் களத்தை உருவாக்கியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவில் ஒன்றிய அரசுடன் சமரசம் செய்ய திமுக முயல்வதாகக் கூறப்படும் சூழலில், “ஆசை வார்த்தைகளுக்கு மயங்கக் கூடாது” என்ற இக்கூட்டத்தின் முடிவு ஆளும்கட்சிக்கு அரசியல் ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை எதிர்க்காமல் திமுக ஆதரித்தால், அதை மாநில உரிமைகளை விற்றுவிட்டதாக மக்கள் முன் சித்தரிக்க தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…