“உள்ளே சென்ற 45 நிமிடங்கள்.. வெளியே வந்தபோது மாறிய உடைகள்”…. பூட்டிய வீட்டில் பேராசிரியர் இருந்த கோலம்… 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி…!

Spread the love

டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த தேவோஸ்மிதா பால் என்பவர், கிழக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 4-ம் தேதியன்று, தேவோஸ்மிதா பால் தனது வீட்டில் தலை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த டெல்லியையும் உலுக்கியுள்ள நிலையில், நியூ அசோக் நகர் காவல் நிலைய போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

பேராசிரியை தேவோஸ்மிதா பாலின் கணவர் பெங்களூரில் வசித்து வரும் நிலையில், இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் டெல்லி வீட்டில் தேவோஸ்மிதா தனியாகவே வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவரது சகோதரி தேவராதி பால், காலையிலிருந்து பலமுறை போன் செய்தும் தேவோஸ்மிதா எடுக்காததால் சந்தேகமடைந்து நேராக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீடு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தேவோஸ்மிதா கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், தேவோஸ்மிதா ஏதோ ஒரு கனமான பொருளால் தலையில் தாக்கப்பட்டு, கூர்மையான ஆயுதத்தால் கைகளில் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த நகைகளோ அல்லது மற்ற விலையுயர்ந்த பொருட்களோ திருடப்படவில்லை என்பதால், இது கொள்ளைக்காக நடத்தப்பட்ட கொலை அல்ல என்பது உறுதியானது. அப்படியெனில், இந்தக் கொலைக்கான உண்மையான நோக்கம் என்ன என்ற கோணத்தில் போலீஸார் தங்களது விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த ஒரு ஆணும், பெண்ணும் தேவோஸ்மிதாவின் வீட்டிற்குள் நுழைந்து, சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை உள்ளே இருந்துவிட்டு, பின்னர் தங்களது உடைகளை மாற்றிக்கொண்டு வெளியேறிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் கிடைத்தன. சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பின் உதவியுடன் கொலையாளிகள் டெல்லியிலிருந்து தப்பியோடியதை போலீஸார் கண்டறிந்தனர். உடனே விரைந்து செயல்பட்ட டெல்லி போலீஸாரின் தனிப்படை, மேற்கு வங்காளத்தில் தலைமறைவாக இருந்த அந்த மர்ம தம்பதியை அதிரடியாகக் கைது செய்தது. பிடிபட்ட தம்பதியை டெல்லிக்கு அழைத்து வந்து, பேராசிரியைக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட பகை என்ன, கொலைக்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து நியூ அசோக் நகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

9 minutes ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

20 minutes ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

49 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

53 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

1 மணத்தியாலம் ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

1 மணத்தியாலம் ago