மணமகளின் காலில் விழுந்த மணமகன்.. நடிகை அபர்ணாதாஸ் திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்.. வைரல் வீடியோ..!

By Mahalakshmi on ஏப்ரல் 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் டாடா என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை அபர்ணாதாஸ். இவர் மலையாளத்தில் பகத் பாஸில் நடிப்பில் வெளிவந்த ஞான் ப்ராக்சன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் நெல்சன் இயக்கத்தின் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

இந்த திரைப்படத்தில் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் டாடா திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். தொடர்ந்து சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று அவரது காதலரான தீபக் பரம்பொல் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவர் மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

 

கடந்த இரண்டு மூன்று தினங்களாக இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதனை தொடர்ந்து நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மணமகளின் பெற்றோர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் தீபக். அதைத் தொடர்ந்து மணமகளான அபர்ணாதாஸ் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Celespot Media (@celespotmedia)