மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெத்தனால் கலந்த இந்த விஷச் சாராயத்தை அருந்திய மேலும் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கள்ளச்சாராயத்தைத் தயாரித்து சட்டவிரோதமாக விநியோகம் செய்த முக்கிய குற்றவாளியான யோகேஷ் வான்கடே உட்பட 8 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இதேவேளையில், அப்பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஹடப்சர் மற்றும் தபோடி காவல் நிலையங்களின் மூத்த காவல் ஆய்வாளர்கள் (Senior Police Inspectors) உட்பட 22 போலிஸ் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID அதிகாரிகள்) இந்த வழக்கைக் கையில் எடுத்து முழு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…