Categories: HISTORY

14 ஆம் நூற்றாண்டில் மதுரையில் பரவிய கொரோனா வைரஸ்? கொத்து கொத்தாக இறந்துபோன பொதுமக்கள்? என்னப்பா சொல்றீங்க!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் முடக்கிப்போட்டது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பல லட்சம் பேர் இறந்துபோனார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் பொது மக்கள் வீட்டிற்குள்ளேயே அடங்கி கிடக்கும் நிலைமை உண்டானது. இதனால் பலருக்கும் வேலை பறிப்போனது. சிறு தொழில்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் பொ.ஆ. 14 ஆம் நூற்றாண்டிலேயே கொரோனா போன்ற ஒரு வைரஸ் மதுரையை பதம் பார்த்ததாக வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். அதாவது பொ.ஆ. 1340 முதல் 1344 ஆம் ஆண்டு வரையில் மதுரை சுல்தானாக ஆட்சி செய்து வந்தவர் கியாத்துதீன் முகமது தம்கானி. அந்த சமயத்தில் மதுரையில் திடீரென ஏதோ ஒரு கொள்ளை நோய் பரவியதாம்.

அந்த கொள்ளை நோயில் பொதுமக்கள் பலரும் இறந்துபோனார்களாம். பொதுமக்கள் மட்டுமல்லாது மதுரை சுல்தானும் அவரது குடும்ப உறுப்பினர்களுமே அந்த கொள்ளை நோய்க்கு பலி ஆகியிருக்கின்றனர். இது குறித்து 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பயணியாய் வந்த இபுன் பதூதா என்ற மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர், பல குறிப்புகளை எழுதியுள்ளாராம்.

Ibn Battuta

அந்த குறிப்பில் அவர் மதுரையில் ஒரு விநோதமான கொள்ளை நோய் ஒன்று பரவியது எனவும் அது பலரையும் காவு வாங்கியது எனவும் எழுதியுள்ளார். அந்த கொள்ளை நோய்க்கு இபுன் பதூதாவும் தப்பவில்லை. ஆனால் அவர் அந்த நோயில் இருந்து உயிர் பிழைத்து வந்துள்ளார்.

“அந்த மரணக் காய்ச்சல் என்னையும் தாக்கியது. நான் இங்கே மதுரையில் கிடைத்த புளியை எடுத்து தண்ணீரில் போட்டு கரைத்து குடித்தேன். மூன்று நாட்களில் எனக்கு அந்த நோய் சரியாகிவிட்டது” என்று இபின் பதூதா தனது குறிப்புகளில் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

Arun

Recent Posts

என்னது..! அஜித்துக்கு இப்படி ஒரு செண்டிமெண்டா..? 20 லட்சமாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவர் செய்யும் வேலை..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேஸ்…

13 mins ago

நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை பார்த்திருக்கீங்களா..? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓய். ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் முதன் முதலாக நடித்து திரையுலகில் என்ட்ரி…

22 mins ago

“ஷோபாவோட வாழ்க்கைய பாலு மகேந்திரா அழிச்சிட்டான்… அவனக் கண்டாலே எனக்குப் புடிக்காது “ ஓப்பனாக பேசிய மெட்டி ஒலி சாந்தி!

தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…

1 hour ago

என் கணவர் இந்தியாவுக்காக நிறைய மெடல்ஸ் வாங்கிருக்காரு.. பாடகி சுசித்ராவின் 2-வது கணவர் இவர்தானா..?

பிரபல பாடகியான சுசித்ரா கடந்த 2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன காக்க காக்க படத்தில் இடம்…

1 hour ago

இணையவாசிகளை அலறவிட்ட ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சஞ்சனா நடராஜன். 2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கி…

2 hours ago

அட நம்ம கோலி சோடா பட ATM-ஆ இது..? இப்படி அழகா மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில்…

2 hours ago