“தாயை கொன்று சடலத்துடன் வாழ்ந்த மகள்”…. அதே வீட்டில் குழந்தைப் பெற்றெடுத்த கொடூரம்… ஓராண்டுக்குப் பின் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

Spread the love

ஹைதராபாத் அருகே காதலுக்கு இடையூறாக இருந்த தாயைக் கொன்று, வீட்டின் உள்ளேயே புதைத்துவிட்டு, ஓராண்டு காலம் அதே வீட்டில் மகள்கள் வாழ்ந்து வந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜவஹர்நகர் பகுதியில் வசித்து வந்த அஞ்சு தாசரி ராமையா என்ற 40 வயது பெண்மணி, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் முதல் காணாமல் போனதாகக் கருதப்பட்டது. இது குறித்து அவரது மூத்த மகள் ரோஷினி குமாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு அஞ்சுவின் உடல் அவர் வாழ்ந்த வீட்டிலேயே கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணமாக அஞ்சுவின் இளைய மகளுக்கும், மோண்டி குமார் சிங் என்பவருக்கும் இடையிலான முறையற்ற காதல் விவகாரம் இருந்துள்ளது. சிறுமியான இளைய மகளுடன் பழகியதற்காக மோண்டி குமார் மீது ஏற்கனவே போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறை சென்றிருந்தார். தனது காதலுக்கு அஞ்சு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்ததாலும், ஜாதிப் பிரச்சனைகளை முன்னிறுத்தி எதிர்த்ததாலும், ஆத்திரமடைந்த காதலர்கள் இருவரும் அஞ்சுவைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2025, மே 12 அன்று சிறையிலிருந்து விடுதலையான மோண்டி, அஞ்சுவின் வீட்டிற்குள் மறைந்திருந்துள்ளார். அஞ்சு வீட்டிற்கு வந்தபோது, இளைய மகள் தனது தாயைப் பிடித்துக் கொள்ள, மோண்டி கத்தியால் அஞ்சுவின் மார்பில் குத்திக் கொலை செய்துள்ளார். அந்தச் சமயத்தில் மூத்த மகள் வேலைக்குச் சென்றிருந்ததால், அவர் வருவதற்குள் உடலைக் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர், தனது தாய் யாரிடமோ தொலைபேசியில் பேசிவிட்டு எங்கோ சென்றுவிட்டதாகக் கூறி மூத்த மகளை இளைய மகள் நம்ப வைத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட உடலை வெளியே கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி அஞ்சுவின் உடலைப் புதைத்துள்ளனர். உடல் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருக்க மணல் மற்றும் சிமெண்ட் கொண்டு அந்த இடத்தை மூடியுள்ளனர். தரை ஏன் சேதமடைந்துள்ளது என்று மூத்த மகள் கேட்டபோது, எலித் தொல்லை காரணமாகச் சரி செய்யப்பட்டுள்ளதாகக் கூறித் தப்பித்துள்ளனர். இதில் உச்சகட்ட அதிர்ச்சியாக, தனது தாயைப் புதைத்த அதே இடத்திற்கு மேல் கட்டில் போட்டு இளைய மகளும் அவரது சகோதரியும் ஓராண்டு காலம் வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், அந்தச் சிறுமி கர்ப்பமானதைத் தொடர்ந்து, 2026 ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சமீபத்தில் அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இறுதியில், மோண்டி குமார் சிங் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தற்பொழுது அஞ்சுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. காதலுக்காகப் பெற்ற தாயையே கொன்று வீட்டிற்குள் புதைத்த இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

16 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

26 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

33 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

37 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

40 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

49 minutes ago