“உன் அந்தரங்க போட்டோவை லீக் பண்ணவா..?” திருமணமான மகளை மிரட்டி அத்துமீறிய தந்தை… “ரூ.10 லட்சம் கடனுக்காக..” பெண்ணின் வாழ்கையை புரட்டி போட்ட சோக சம்பவம்…!!

Spread the love

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பகுதியில், 22 வயது இளம்பெண் ஒருவர் தனது மாமியார் வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 75 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் அந்தப் பெண்ணிடம் மருத்துவமனையில் காவல்துறை வாக்குமூலம் பெற்றபோது, மிகக் கொடூரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பாதிக்கப்பட்ட பெண், 57 வயதான தனது சொந்தத் தந்தை (உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்) மற்றும் மேலும் இருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது திருமணத்திற்கு முன்பிருந்தே தந்தை தன்னைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகவும், திருமணம் முடிந்த பின்னரும் அந்தக் கொடுமை நீடித்ததாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மற்றொரு பின்னணியாக, அந்தப் பெண்ணின் தந்தை தனது மகளின் மாமனாரிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கித் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மாமனார் வற்புறுத்தியதால் தன்னிடம் பணம் கேட்க வந்த சொந்த மகளை, அவளது அந்தரங்கப் புகைப்படங்களைப் பொதுவெளியில் கசியவிட்டு விடுவதாக அந்தத் தந்தை மிரட்டியுள்ளார். இந்த மன உளைச்சலாலேயே அந்தப் பெண் விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த ஆசிரியரை சனிக்கிழமை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரின் அலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் ஆய்வுகளுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Devi Ramu

Recent Posts

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

19 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

33 minutes ago

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

41 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

47 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

57 minutes ago