“காதலனுடன் சேர்ந்து கல்லூரி மாணவி செய்த கொடூரம்”…. வீட்டில் அந்த கோலத்தில் கடந்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்….!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில், பெற்ற தாயையே காதலனுடன் சேர்ந்து மகள் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னம் வலை கம்பெனி தெருவைச் சேர்ந்த கலாவதி (42) என்பவர், தனது இளைய மகள் சுருதி (19) மற்றும் மூத்த மகளுடன் வசித்து வருகிறார். சுருதி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தபோது, அதே கல்லூரியைச் சேர்ந்த அபிலாஷ் என்ற மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.

அபிலாஷிற்கு அவசர பணத் தேவை இருப்பதாகக் கூறி கேட்டதற்கிணங்க, சுருதி தனது தாயார் கலாவதி தனது மகள்களின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் நகையை ரகசியமாக எடுத்து காதலனிடம் கொடுத்துள்ளார். நகை மாயமானது குறித்து அறிந்த கலாவதி, இது குறித்து தனது மகளிடம் விசாரித்தபோது உண்மை தெரிய வர, தாய்-மகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுருதியின் வீட்டிற்கு வந்த அபிலாஷிடம் தாய் கலாவதி நகை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அபிலாஷ், அங்கிருந்த உருட்டுக் கட்டையால் கலாவதியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த கலாவதியை, தனது காதலனுடன் சேர்ந்து கொண்டு சுருதி துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளனர். கலாவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கலாவதி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், சுருதி மற்றும் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். படிக்கும் வயதில் காதலில் விழுந்து, பெற்ற தாயைக் கொல்லத் துணிந்த மாணவியின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

2 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

7 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

12 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

13 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

15 minutes ago