மதுரையை சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஐந்து மகள்கள் ஒரு மகன். ஐந்தாவது மகள் திவ்யா எம்எஸ்சி படித்து வந்துள்ளார். மலேசியாவுக்கு சென்று மேற்படிப்பு படிக்கப் போவதாக வீட்டில் இருந்து சென்றுள்ளார். அது சம்பந்தமான தகவல்களையும் வீட்டில் காண்பித்துள்ளார். தன்னுடைய மகள் மலேசியாவில் உயர் படிப்பு சென்றதை நினைத்து தர்மராஜ் மிகவும் பெருமையாக மற்றவர்களிடம் கூறியுள்ளார். படிப்புக்கு முதலில் ஐந்து லட்சம் வரை கட்ட வேண்டும் என்றும் மதுரையிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து விமான நிலைய மூலமாக மலேசியா செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபடுவது போல் இருந்ததால் திவ்யாவின் செயல்பாடுகளில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
படிப்பில் சேர்வதற்கு தந்தை கொடுத்த 5 லட்சம் ரூபாய் பயணச் செலவு அனைத்தையும் வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இது மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்தது. வீட்டில் எல்லோரும் திவ்யா மலேசியாவில் இருப்பதாக நினைத்திருந்தார்கள். ஆனால் திவ்யா மலேசியாவுக்கு செல்லாமல் மதுரையில் தான் இருப்பதாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது. பிரகாஷ் என்பவர் திவ்யாவுக்கும் எனக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. நாங்கள் உள்ளூரில் தான் இருக்கிறோம்.
எங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் திவ்யா தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார் என்றும், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளோம் என்று கூறிவிட்டு வைத்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அங்கு சென்று விசாரித்ததில் மகளின் மலேசியா நாடகம் தெரிந்த நிலையில் அதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்கள். போலீசார் பிரகாஷை பிடித்து விசாரித்த போது அவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது.
சமீப காலமாக பிரகாஷுக்கும், திவ்யாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அவர்களுடைய காதல் வாழ்க்கையால் அவரால் பெற்றோருடன் செல்ல முடியவில்லை. நிலைமையை சொல்லவும் முடியவில்லை. இதனால் விபரீதம் முடிவு எடுத்து தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனால் அவருடைய இரண்டு வயது குழந்தையும் பரிதவித்து நிற்கிறது.
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…