பிரிந்து சென்ற மனைவி… பிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா.. அந்த நடிகை இவங்கதானா..?

Spread the love

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா நடிகையும் டான்சருமான செர்ப்பியாவை சேர்ந்த நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை காதலித்து கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா பாண்டியா என்ற ஐந்து வயது மகன் இருக்கின்றார். மகன் வளர்ந்த பிறகு அவரின் மூன்றாவது வயதில் தன் மனைவியை ஹர்திக் பாண்டியா மீண்டும் திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட கடந்த 2024 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர்.

தற்போது மகன் நடாஷாவுடன் இருந்து வர அவ்வபோது தன் அப்பா ஹர்திக் பாண்டியாவை சந்தித்து வருகின்றார். இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியாவை பாலிவுட் நடிகையான இஷா குப்தா காதலித்ததாக தகவல் வெளியான நிலையில் அதற்கு இஷா குப்தா சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளார். அதில், நானும் ஹர்திக் பாண்டியாவும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அதை போய் டேட்டிங் என்ன சொல்ல முடியாது. ஒரு இரண்டு மாதம் பேசி இருப்போம். அவ்வளவுதான்.

அது கைகூடாமல் போகலாம் என்ற நிலையில் இருந்தோம். டேட்டிங் என்ற நிலையை அடைவதற்கு முன்பே நாங்கள் பேசுவதை நிறுத்தி விட்டோம். ஒன்று அல்லது இரண்டு முறை சந்தித்திருப்போம். அதையெல்லாம் டேட்டிங் செய்தோம் எனக் கூற முடியாது. எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நின்ற போது மனக்கசப்பு எதுவும் இல்லை. இது நமக்கு ஒத்து வராது என்று மட்டுமே எங்களுக்கு தோன்றியது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

இனி அதிமுகவே கிடையாதா?…. இபிஎஸ் எடுத்த முடிவால் மொத்தமாக காலி…. தனுஷுக்கு ஜால்ரா போடும் மாஜிக்கள்… கொதித்தெழுந்த தொண்டர்கள்…!

தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெருமைக்குரிய அதிமுக, நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

6 minutes ago

இப்படியும் ஒரு பெண்ணா?… விஷம் வேலை செய்யல..! கள்ளக்காதல் விவகாரம்… மனைவியின் வெறிச்செயல்…!!

திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட முறைகேடான உறவுகளும், அதனால் எழும் குற்ற உணர்வற்ற சுயநலமும் தனிமனித ஒழுக்கத்தைச் சிதைத்து மிகக் கொடூரமான…

11 minutes ago

“அவன் சின்னப் பையன்”… காவல்துறை திமிர்ப்பேச்சு… நள்ளிரவில் 100 கி.மீ வேகம்… ஏழை வியாபாரி பலி… ஸ்டேஷனில் நடந்த பரபரப்பு…!!

கொச்சியில் அதிகாலை வேளையில் நிகழ்ந்த இந்த விபத்து, சாதாரண உழைப்பாளி ஒருவரின் வாழ்வை அநியாயமாகப் பறித்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தை நிலைநாட்ட…

23 minutes ago

“இனி அவ்வளவுதான்”… திடீரென வெடித்த பைப்… அந்தரத்தில் நின்ற பேருந்து… கடவுள் போல் காப்பாற்றிய ஒற்றை மரம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

உத்தராகண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தின் போது, பயணிகள் தங்களின் உயிரைத் தற்காத்துக் கொள்ள போராடிய பதறவைக்கும்…

30 minutes ago

சென்னையை சுத்துப்போடும் பெருமழை…. 5 மாவட்டங்களுக்கு மிக ஆபத்தான ‘ரெட் அலர்ட்… 50 கி.மீ வேகத்தில் சுழன்றடிக்கப் போகும் புயல் மழை…..!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை,…

31 minutes ago