ரயில் நிலையத்தின் அருகே நின்று கொண்டிருந்த ரயிலின் ஜன்னல் வழியாக ஒரு குழந்தையை வெளியேற்றிச் சிறுநீர் கழிக்க வைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தந்தை, ரயிலின் அவசரக்கால ஜன்னல் வழியாகக் குழந்தையை வெளியேற்றி, தண்டவாளத்தின் அருகில் இருந்த குழாயின் மீது நின்றுகொண்டு, ஆபத்தான முறையில் குழந்தையைச் சிறுநீர் கழிக்க வைத்த காட்சி பதிவாகியுள்ளது.
இந்தச் செயலைப் பலரும் கண்டித்ததுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். சிலர், ரயிலில் கழிப்பறை வசதி இல்லாததாலோ அல்லது வேறு ஏதேனும் கட்டாயம் இருந்ததா என்பதைப் போலீசார் முதலில் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இருப்பினும், இது முற்றிலும் பொறுப்பற்ற செயல் என்றும், ரயில் புறப்பட்டிருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் பெரும்பாலானோர் குற்றம் சாட்டினர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே சேவா நிர்வாகம் இதற்குப் பதிலளித்தது. மேலும், அசெளகரியத்திற்கு வருத்தம் தெரிவித்த ரயில்வே நிர்வாகம், புகார் குறித்து நடவடிக்கை எடுக்கத் தேவையான பயண விவரங்கள், ரயில் நிலையம் மற்றும் மொபைல் எண்ணை அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…