அடியாத்தி…. என்ன இது…? பிரம்மாண்ட மலைப்பாம்புடன் டான்ஸ்…. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அட்டூழியம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

Spread the love

ஹைதராபாத் ஜவஹர்நகரில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, நடனக் குழு ஒன்று பொதுமக்களின் முன்னிலையில் ஆபத்தான இந்திய மலைப்பாம்பு மற்றும் கோழியை வைத்து வன்கொடுமை செய்து ஆட்டம் காட்டி வந்துள்ளது.

இதுகுறித்துத் தகவல் அறிந்த ஹைதராபாத் விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சங்கத்தினர், கடந்த 5 நாட்களாக விசாகப்பட்டினத்தில் இருந்து அந்த டான்ஸ் குழுவைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 19 அன்று கொண்டாப்பூர் பகுதியில் பிடிக்க முயன்றபோது தப்பிச் சென்ற பாம்பாட்டியை, செப்டம்பர் 20 அன்று மதுரா நகர் காவல்துறையின் உதவியுடன் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அவரிடமிருந்து இந்திய மலைப்பாம்பு மற்றும் கோழி ஆகியவை பத்திரமாக மீட்கப்பட்டன. இந்திய மலைப்பாம்பு என்பது 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கக்கப்பட்ட ஒரு உயிரினமாகும். சட்டவிரோதமாகப் பாம்பைப் பயன்படுத்தி வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

சீனியர் vs ஜூனியர்!… முகமூடி கும்பலின் அட்டகாசம்… மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்… பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தக் களரி…!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…

9 minutes ago

மனசாட்சியே இல்லையா?… சந்தேகத்தால் வெடித்த விபரீதம்… மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…

21 minutes ago

அட கடவுளே… போன் கொடுத்து உதவியது குத்தமா?… 2.5 ஆண்டுகள் சிறையில் வாடிய தொழிலாளி… உயிருடன் திரும்பி வந்து காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்…!

கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…

27 minutes ago

அடகொடுமையை..! காட்டுக்குள் 12 வயது சிறுமி கடத்தல்… கொடூரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தப்பிக்க முயன்ற போது நடந்தது என்ன?… பரபரப்பு பின்னணி…!!

காட்டுப் பகுதிக்கு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

28 minutes ago