Categories: சினிமா

டான்ஸ் ஷோஸ் நீங்க டிவி-யில் பாக்குற மாதிரி இல்ல.. எங்க முகத்த கிளோஸ் அப்பில் வச்சிருவாங்க.. உண்மையை போட்டுடைத்த நடன இயக்குனர்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் கல்யாண். இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கு கோரியோகிராப் செய்துள்ளார். கடந்த 1987-ஆம் ஆண்டு ரிலீசான பெயர் சொல்லும் பிள்ளை திரைப்படத்தில் நடன கலைஞராக என்ட்ரி கொடுத்தார். 1980-களில் பல தமிழ் திரைப்படங்களில் உதவிய நடன இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1996-ஆம் ஆண்டு ரிலீசான கல்லூரி வாசல் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் எஸ்.ஏ சந்திரசேகரின் மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்துள்ளார். இப்போது பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் ஒன் மற்றும் விஜய் டிவியின் கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகியவற்றில் நடுவராக இருக்கிறார். சமீபத்தில் சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் கல்யாண் மாஸ்டர் கலந்து கொண்டார். அப்போது சித்ரா லட்சுமணன் பெரும்பாலும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடுவர்களுக்கு சுதந்திரம் இல்லை. அவங்க சொல்லும் கருத்தைதான் நீங்கள் சொல்கிறீர்கள் என விமர்சனம் இருக்கிறது.

 

அது உண்மையா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த கல்யாண் மாஸ்டர், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படி இருந்தது கிடையாது. நிகழ்ச்சியில கலந்துக்குற எல்லாருமே இதுல ஜெயிச்சு ஒரு பெரிய லெவலுக்கு போகணும்னு நினைச்சு வந்திருப்பாங்க. அவங்க டான்ஸ் ஆடுறது ஆடியன்ஸும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க. ஆனா அங்க ஒரு தப்பு நடக்குது. அது என்னன்னா நீங்க டிவில பார்ப்பத நாங்க அங்க நேர்ல பாக்குறது கிடையாது.

டிவில எப்படின்னா, அவங்க ஒரு தப்பு பண்ணும் போது எங்க முகத்த கிளோஸ் அப்ல காட்டிடுவாங்க. டிவில பாக்குற ஆடியன்ஸ் அவங்க கரெக்டா தான் ஆடுனாங்க. ஜட்ஜஸ் எதுக்கு தப்புன்னு சொல்றாங்கன்னு யோசிப்பாங்க. அப்பதான் நாங்க அந்த தப்பை போட்டு காமிங்கன்னு சொன்னோம். இல்லன்னா நாங்க தவறான முடிவு எடுத்த மாதிரி ஆகிரும். அதுக்கப்புறம் தான் நாங்க சொன்ன தப்ப டிவில கரெக்டா போட்டு காட்டுவாங்க. மத்தபடி வேற எதுவும் நடந்தது கிடையாது என கூறியுள்ளார்.

admin

Recent Posts

“நாய் கடித்ததால் இப்படியா செய்வது?”.. தெருநாயை கற்களால் அடித்துக் கொன்ற கும்பல்… ஜம்முவில் அரங்கேறிய கொடூரக் கொலை… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், தெருநாய் ஒன்றை ஒரு கும்பல் கற்கள் மற்றும் மரக் குச்சிகளால் அடித்துக் கொன்ற கொடூரமான…

9 minutes ago

நெஞ்சே பதறுது..! குழந்தைகள் விளையாடும் பொம்மைக்குள் காத்திருந்த ஷாக்.. அதிர்ச்சியில் உறைந்த விமான நிலைய அதிகாரிகள்..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…

18 minutes ago

“மாம்பழம் இல்லை.. இது இனிப்பு விஷம்!”… எலுமிச்சையை வைத்துச் செய்யப்படும் இந்த மேஜிக் சோதனையைப் பாருங்க… சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவின் பின்னணி என்ன?

'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…

21 minutes ago

3 கார் முதல் வெளியூர் விமான பயணம் வரை… தமிழக முதல்வரின் சொகுசு வசதிகள் என்னென்ன..? வியக்க வைக்கும் தகவல்..!!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…

29 minutes ago

“ஆட்டோவிலேயே சன்ரூஃப்பா? பிஎம்டபிள்யூ-வையே ஓரம் கட்டிய தந்தையின் மாஸ் ஐடியா… சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் குழந்தைகள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ”…!!!

விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…

31 minutes ago

BIG BREAKING: இரண்டாக உடைந்தது அதிமுக… அதிகாரபூர்வ தகவல்..!!

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…

35 minutes ago