Categories: சினிமா

மொத்தம் 22 படங்கள் டிராப் … 9 வருஷம் கஷ்டப்பட்டேன்… எமோஷனலாக பேசிய டி.இமான் ..!

Spread the love

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டி.இமான். இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே இசையமைப்பாளர் இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர்.  ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் தனது மனைவியை இமான் விவாகரத்து செய்து விட்டார். அதுவும் விவாகரத்து செய்து ஓராண்டுக்கு பிறகு தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

பிரபல கலை இயக்குனர் உபாால்டுவின் மகள் எமிலி என்பவரை இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரை மறுமணம் செய்து முடித்துள்ளார். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பிறகு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய டி.இமான் டிராப் ஆன படங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது ,”தமிழன் ரிலீஸ் ஆகி அதன் பிறகு மைனா என்ற படம் அமைவதற்கு கிட்டத்தட்ட எட்டு ஒன்பது வருடம் ஆனது. அதுக்கு முன்னாடி நிறைய படங்கள் பூஜை போட்டு பூஜை போட்டு டிராப்பாகி விட்டது. டிராப் ஆன படங்கள் மொத்தம் 22 இருக்கும். ஆரம்பத்தில் பூஜை போட்டு டிராப்பானது மட்டும் இல்லாமல் ஒவ்வொன்றுக்கும் பாட்டு கூட ரெக்கார்ட் செய்திருப்போம்.

சில படங்கள் முடிந்து ரீ ரெகார்டிங்கிற்கு நிதி இல்லாமல் நின்ற திரைப்படங்கள். இந்த மாதிரி நிறைய படங்கள் இருக்கிறது. மாட்டிக்கிட்டது என்றால் மாட்டிக்கிட்டது தான். அதை நான் வேறு எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. சார் நான் எதையாவது பண்ணி கொண்டு வந்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் அதற்கு வருஷக்கணக்காகி விடும.  காலதாமதம் பண்ணினால் அந்த படம் காலாவதியாகிவிடும்” என்று எமோஷனலாக பேசி உள்ளார்.

Soundarya

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

9 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

9 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

9 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

9 மணத்தியாலங்கள் ago