“உங்கள் கணக்கில் பயங்கரவாதப் பணம்…” 7 நாட்கள் ‘டிஜிட்டல் கைதில்’ வைத்து முதிய தம்பதியை மிரட்டிய சைபர் கும்பல்… 6 மாத போராட்டத்திற்கு பிறகு தெரிந்த உண்மை…!!

Spread the love

டெல்லியின் துவாரகா பகுதியில் வசிக்கும் 74 வயது ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியருக்குத் தேசிய புலனாய்வு அமைப்பான அதிகாரி போலப் பேசிய நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். அவரது வங்கிக் கணக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும், டெல்லி செங்கோட்டை கார் வெடிப்புச் சம்பவத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து ஏடிஎஸ் அதிகாரிகள் போல வீடியோ அழைப்பில் பேசிய மோசடிக் கும்பல், முதியவரையும் அவரது மனைவியையும் 7 நாட்கள் “டிஜிட்டல் கைதில்” வைத்து யாருடனும் பேசவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, அவர்களின் நிலையான வைப்புத் தொகை ரூ.30 லட்சத்தைப் போலியான வங்கிக் கணக்கிற்கு மாற்ற வைத்துள்ளனர்.

பணம் சென்ற பிறகு மோசடிக் கும்பல் அழைப்பைத் துண்டித்ததால் சந்தேகமடைந்த தம்பதி பொலிஸில் புகாரளித்தனர். போலீசார் நடத்திய 6 மாத தீவிர விசாரணையில், ஹரியானாவைச் சேர்ந்த போலியான நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்குப் பணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.12 லட்சம் மீட்கப்பட்டுத் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பு மூலம் “டிஜிட்டல் கைது” செய்யாது எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

3 seconds ago

அடச்சீ… குடிக்காதேனு சொன்னது குத்தமா?… பெற்ற தாயைக் காப்பாற்ற முயன்ற… தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற போதை வெறியன் மகன்… ஆந்திரப் பிரதேசத்தில் உலுக்கிய பகீர் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…

4 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ஈரமான சாலையில் வழுக்கி விழுந்த… பைக்கர் மீது ஏறி இறங்கி நிற்காமல்… பறந்த கொடூர எஸ்யூவி… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…

34 minutes ago