விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரித்திகா. இவர் சீரியல்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ரித்திகா காதும் காதும் வைத்தது போல விஜய் டிவி கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமணம் மிக எளிய முறையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்பு நடைபெற்றது. தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாமல் ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு சின்னத்திரையில் தலை காட்டாத ரித்திகா கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ரித்திகா நிறைமாத வயிற்றுடன் தனது கணவருடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…