இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக செல்போன்களில் மக்களை ஏமாற்றும் வகையில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் நாம்தான் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும். இப்படியான நிலையில் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த செந்தில் என்பவருடைய மனைவி ஸ்கூட்டரில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதால் அபராதம் செலுத்த கோரி செந்தில் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த லிங்கை அவர் தொட்டவுடன் செல்போன் ஹேங்க் ஆகியுள்ளது. அதன் பிறகு செல்போனை ஆப் செய்து விட்டு ஆன் செய்ததும் அவருடைய வங்கியில் இருந்த 12,600 ரூபாய் பணமும் மொத்தமாக காணாமல் போய்விட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உடனே இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலி லிங்குகளை கிளிக் செய்து மோசடி வளையில் சிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…