“டெல்லி தடியடி… சென்னை கொந்தளிப்பு”…. தவெக ஆதரவை வாபஸ் பெற சிபிஎம் முடிவு?…. பின்னணியில் அரங்கேறிய நள்ளிரவு அதிரடி….!

Spread the love

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ உள்ளிட்ட அமைப்புகள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சால் பெரும் வன்முறை வெடித்தது. இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், பல மாணவர்களும் காயமடைந்த நிலையில், டெல்லியில் இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு பதற்றம் நீடித்து வருகிறது.

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும் கல்லூரி மாணவர்களும் இணைந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக உணர்வுப்பூர்வமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை ஒடுக்கக் காவல்துறை கடுமை காட்டி வருவதாக ஜனநாயக சக்திகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களைக் காவல்துறை முரட்டுத்தனமாக நடத்துவதாகவும், பெண் தோழர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. ‘நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு மாறாது’ என அறிக்கைகள் மூலம் கூறிவரும் தமிழக வெற்றிக் கழக அரசு, களத்தில் நடக்கும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைப்பதாகப் போராட்டக்காரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாநில அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் மற்றும் அரசியல் தோழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகத்தை நேற்று இரவு சந்தித்த கட்சி நிர்வாகிகளும் மாணவர்களும், தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், முதல்வர் விஜயை நேரடியாகச் சந்தித்துக் கட்சியின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் அழுத்தம் தந்தனர். அதற்குப் பதிலளித்த சண்முகம், முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், சந்திப்பின் போது கட்சியின் உணர்வுகளையும் கோபத்தையும் நிச்சயம் வெளிப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

8 மணத்தியாலங்கள் ago