வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு பகுதியில் வசித்த கோகிலா என்பவரின் கள்ளக்காதல் விவகாரத்தில், 2020ஆம் ஆண்டில் நடந்த கொலை சம்பவத்திற்கு தற்போது நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மன்னார்குடியைச் சேர்ந்த கோகிலாவுக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், அவர் அதே பகுதியில் வசித்த சுனில் (25) என்பவருடன் தகாத உறவு வைத்திருந்தார்.
கோகிலா தனது நண்பர்களான மணி மற்றும் சதீஷ் ஆகியோருடனும் பழகி வந்ததால், சுனில் மதுபோதையில் கோகிலாவை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கோகிலா, சுனிலைக் கொலை செய்ய முடிவெடுத்து, தனது நண்பர்கள் மணி, சதீஷ் மற்றும் தந்தை முத்து ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார்.
சுனிலை வீட்டிற்கு வரவழைத்த நால்வரும் சேர்ந்து, அவரை இரும்பு கம்பி, கட்டை மற்றும் கத்தியால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு, சுனிலின் தலையைச் சிதைத்து, மூளையை வெளியே எடுத்து அருகில் இருந்த கிணற்றில் வீசியுள்ளனர். பின்னர் உடலை அருகிலுள்ள கீரைத் தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றம், கோகிலா, மணிகண்டன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வேலூரில் நடந்த அந்த கொடூரக் கொலை சம்பவத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…