பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டத்தில் உள்ள சைடேக் கிராமத்தைச் சேர்ந்தவர் நஷீப் கவுர் மற்றும் அவரது கணவர் ராம் சிங். அவர்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் 200 ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை ராம்சிங் வாங்கி இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அந்த லாட்டரி சீட்டுக்கு குலுக்கலில் 1.5 கோடி ரூபாய் பரிசு தொகை விழுந்தது. இந்த விஷயம் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் பரவியது. இதனால் யாராவது தங்களை தாக்கி விட்டு பணத்தை அபகரித்துக் கொள்வார்கள் என்று ராம்சிங் அவரது மனைவி நஷீப் கவுர் தம்பதியர் பயந்தனர்.
இதனால் ராம் சிங் வீட்டை பூட்டிவிட்டு தனது செல்போனையும் அணைத்துவிட்டு தனது மனைவியுடன் யாருக்கும் சொல்லாமல் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார். இந்த தகவலை அறிந்த போலீசார் ராம்சிங் மற்றும் நஷீப் கவுரை தொடர்பு கொண்டனர். மக்களின் பாதுகாப்புக்காக தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனால் தைரியம் அடைந்த ராம்சிங் தனது மனைவியுடன் தங்கள் வீட்டுக்கு திரும்பி இருக்கின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…