கூட்டுறவு வங்கியில் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி… தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!

By Nanthini on தை 15, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி தள்ளுபடி வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்து, இந்த முறையும் அத்தகைய சலுகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் நகைக்கடன் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள 167 வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் இதற்கான எதிர்பார்ப்பு கிராமப்புற மக்களிடையே மிக அதிகமாக உள்ளது.

இருப்பினும், கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது ஒரு முக்கிய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கூட்டுறவு சங்கங்களில் ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்கப்பட வேண்டும் என்றும், தள்ளுபடி சலுகையைப் பெறுவதற்காகத் திடீரென உறுப்பினராகி கடன் பெற முயற்சிக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவசரத் தேவைக்காகப் புதிதாகக் கணக்குத் தொடங்கி நகைக்கடன் பெற வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

   

தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும் கூட்டுறவு வங்கி நகைக்கடன்கள் விவசாயிகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகின்றன. ஆனால், தற்போது புதிய வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்க மறுக்கப்படுவதால், பொதுமக்கள் தங்கள் அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளைத் திட்டமிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, நகைக்கடன் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை அரசு முறைப்படி அறிவிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.